மதுரைப் புதுமண்டபம் வி. என். இராகவக்கோன் புத்தகக் கடையில் கிடைக்கும் புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் உள்ளது. அது அந்த இராகவக்கோன் பதிப்பித்த ஆத்திசூடி வெண்பா என்னும் நூலில் இணைப்பாக உள்ளது. அந்த ஆத்திசூடி வெண்பா நூல் 1905 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. [1]
பழமையான பட்டியலில் காணப்படும் நூல்கள் அக்காலப் பதிப்புநூல்கள் சிலவற்றை அறிய உதவுகின்றன. வயித்தியம், ஆருடம். சரித்திரம் முதலான பொருள் கூறுகளில் சிந்து, கும்மி, ஒயிலாட்டம் வழிநடைப் பாடல் முதலான நாடோடிப்பாடல் இலக்கியங்களாக அச்சேறியுள்ள நூல்கள் இவை.
அகரவரிசையில் மாற்றித் தரப்படுகின்றன.
நூல் |
குறிப்பு
|
18 சாஸ்திரம் அடங்கிய கட்டளைத் திரட்டு |
கட்டளைப்பாவாலான திரட்டுநூல்
|
அங்கவித்தை தூத லக்ஷ்ண ஆரூடம் |
யோகாச உடற்கூறு பற்றிய நூல்
|
அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து |
காவடிப்பாடல்
|
அபிமன்னன் சண்டைக் கும்மி |
கும்மிப்பாடல்
|
அம்பிகாபதி கோவை |
கோவை இலக்கியம்
|
அம்பிகாவதி சரித்திரம் |
வரலாறு
|
அம்பிகை வருக்கமாலை |
வருக்கமாலை
|
அழகர் கோயில் வழிநடைச்சிந்து |
வழிநடைப்பாடல்
|
ஆத்திசூடி வெண்பா |
ஆத்திசூடி வெண்பா
|
ஆறெழுத்தந்தாதி சக்கரத்துடன் |
சரவணபவ
|
உருக்குமாங்கத சரித்திரம் |
வரலாறு
|
நூல் |
குறிப்பு
|
கதிர்காமமாலை பழனிமாலை |
இலங்கை கதிர்காமம்
|
கந்தரனுபூதி சக்கரத்துடன் |
கந்தரனுபூதி
|
காந்தர்வ விவாகச் சிந்து |
களவியல்
|
கிருஷ்ணாவதாரன் வர்னிப்பு |
கண்ணன் கதை
|
கெற்பச் சிந்தாமணி |
தாய் வயிற்றில் கரு வளர்ச்சி
|
நூல் |
குறிப்பு
|
சங்கீதஸ்வரபூஷணி |
இசை நூல்
|
சங்கீதஸ்வரபூஷணி 2-வது சங்கீத காயகாமிர்த வர்ஷணி |
இசை நூல்
|
சர்வார்த்து சிற்ப சிந்தாமணி |
சிற்பக் கலை
|
சித்திராங்கி விலாசம் |
ஆண்மகன் உலாப் போந்த காலம் மாறி வேசைப்பெண் உலா வரும் காட்சி
|
சித்திராரூடம் விஷவயித்தியம் |
நஞ்சு முறிவு வயித்தியம்
|
சோதிட ஒயிற்கும்மி |
சோதிடம்
|
சோதிட நவகிரக மாலை |
சோதிடம்
|
நூல் |
குறிப்பு
|
தன்வந்திரி வைத்தியக் கும்மி |
மருத்துவம்
|
தாராசாங்க விஜய சரித்திரம் |
வெற்றி வரலாறு
|
திரிபுரைமாலை சக்கரத்துடன் |
உமை சிவனை மணந்த கதை
|
திருவள்ளுவர் நவரத்ன வைதிய சிந்தாமணி 800 |
திருவள்ளுவர் பெயரில் தோன்றிய மருத்துவ நூல்
|
நூல் |
குறிப்பு
|
பஞ்சதசப் பிரகரணம் |
500 பாடல் ஐங்குறுநூறு போன்ற அமைப்பினைக் கொண்ட நூல்
|
மணிமாலிகைச் சரித்திரம் |
மணிமாலிகை என்பவளின் வரலாறு
|
மதுரைவீரன் கோலாட்டப்பாடல் |
மதுரைவீரன் வரலாறு
|
மனோன்மணிமாலை சக்கரத்துடன் |
மனோன்மணியைப் போற்றும் பாடல்
|
மாட்டு வாகடம் சக்கரத்துடன் |
மாடு வாங்குபவருக்கு உதவும் விலங்கியல் நூல், சோதிடச் சக்கரப் படத்துடன்
|
மாதர் நீதிக் கும்மி |
மகளிர் நீதி
|
மானாமதுரை மஹாத்மியம் |
ஊர் வரலாறு
|
மீனாக்ஷியம்மன் சிந்து |
மதுரை மீனாட்சி வாழ்த்து
|
மூக்கவேளார் அரிச்சந்திர நாடகம் |
அரிச்சந்திரன் கதை
|
மோகனரஞ்சி தாதி காதல் |
தாசியின் காதல்
|
நூல் |
குறிப்பு
|
யாப்பருங்கலக் காரிகை மூலமும் உரையும் நயம் பதிப்பு |
யாப்பருங்கலக் காரிகை
|
வராகிமாலை சக்கரத்துடன் |
கூர்ம அவதாரக் கதை
|
விபூஷணன் புத்தி புதிது |
இராமாயண வீடணன் புத்தி
|
- ↑ இராமபாரதி, ஆத்திசூடி வெண்பா, இராகவக்கோனார் பதிப்பு, 1905, உட்சேர்க்கை