பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி (Bannari Amman Institute of Technology) தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் கல்லூரி. இக்கல்லூரி பண்ணாரி அம்மன் குழுமத்தால் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளுள் ஒன்று. பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வியில் 19 இளங்கலை பாடப்பிரிவுகளும் 15 முதுகலை பாடப்பிரிவுகளும் வழங்கப்படுகின்றன. அனைத்து துறைகளும், ஆராய்ச்சி மையங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1]
நிறுவப்பட்டது | 1996 |
---|---|
வகை | தன்னாட்சி |
கல்லூரி முதல்வர் | முனைவர் C. பழனிசாமி |
அமைவு | சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா |
வளாகம் | 181 ஏக்கர் |
இணையதளம் | www.bitsathy.ac.in |
சேர்க்கை
தொகுகல்லூரியில் இளங்கலை பொறியியல் சேர்க்கை அண்ணா பல்கலைகழக பொது பொறியியல் சேர்க்கை மூலமாக நடைபெறுகிறது. முதுகலை பொறியியல் சேர்க்கையானது பொது நுழைவுத் தேர்வின் தர வரிசை படி நடக்கிறது.
மன்றங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள்
தொகுமாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கவும் ,வெளிக்கொணரவும் ,தலைமை பண்புகளை வளர்க்கவும்,ஐம்பதுக்கும் மேற்பட்ட மன்றங்கள் செயல்படுகின்றன .
நூலகம்
தொகுஇங்குள்ள நூலகம், ஐந்து மாடி கட்டிடத்துடன் 83,000 புத்தகங்களையும், 400 இந்திய மற்றும் சர்வதேச பொறியியல் ஆய்வு இதழ்களையும் கொண்டுள்ளது.
விடுதி
தொகுஇக்கல்லூயில் மாணவர்களுக்காக நான்கு விடுதிகளும், மாணவிகளுக்காக ஐந்து விடுதிகளும் உள்ளன.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Welcome to BIT". www.bitsathy.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2017-08-29.