பண்ணுக்கிழங்கு
பண்ணுக்கிழங்கு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. bulbifera
|
இருசொற் பெயரீடு | |
Dioscorea bulbifera L. | |
வேறு பெயர்கள் [1] | |
|
பண்ணுக்கிழங்கு (Dioscorea bulbifera, ஆங்கிலம்: air potato; சமசுகிருதம் : வராகி, மலையாளம் : அடதாப்பு, மராத்தி : டுக்கர் காண்ட்) இது ஒரு கொடிபோல் வளர்ந்து பூத்து சேனைக்கிழங்கைப் போல் காணப்படும் தாவரம் ஆகும். இதன் வாழிடம் ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான், பிலிப்பீன்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வளருகிறது.[1] மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளிலும், மற்றும் மேற்கு இந்திய தீவுக்கூட்டங்களிலும் மருத்துவ பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகிறது.[1]
பயன்பாடு
தொகுபொதுவாக பாரம்பரிய மருத்துவத்தில் இதன் கிழங்கை விழி வெண்படல அழற்சி, வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.