பண்ணையடிமை
பண்ணையடிமை (Serfdom) முறை என்பது உலகின் பல பகுதிகளில் உள்ள நிலவுடமைச் சமூகத்தில் இருந்த ஒரு அடிமை முறையாகும். இம்முறையில் தமிழகத்தில் அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பண்ணையடிமைகளாக இருந்தனர். அவர்களின் முன்னோர்கள் வாங்கிய கடனுக்கு புரோநோட் என்னும் கடன் பத்திரத்தை எழுதிக் கொடுத்துவிட்டு சுகந்தை என்ற பெயருடன் பண்ணையடிமையாக வேலை செய்து வந்தனர். ஒரு நிலவுடைமையாளரிடன் வேலை செய்யும் பண்ணையடிமை அவரிடம் மட்டும்தான் வேலை பார்க்க வேண்டும். அவரது இடத்தில்தான் குடிசை போட்டுத் தங்கியிருக்க வேண்டும். வேறொரு இடத்துக்கோ அல்லது வேறு யாரிடமோ வேலைக்குப் போகக் கூடாது. இந்த பண்ணையடிமைகள் பண்ணையார்களால் பலவிதமான துண்பத்திற்கு ஆளாயினர். இவர்களை மீட்க பொதுவுடமை இயக்கத்தினர் பாடுபட்டனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ பெ.சண்முகம் (29 செப்டம்பர் 2017). "பி. சீனிவாச ராவ்: விவசாயத் தொழிலாளர்களின் கலகக்குரல்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help)