பண்பொழி திரௌபதி அம்மன் கோயில்

பண்பொழி திரௌபதி அம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி வட்டத்தில், செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற கிராமத்தில் உள்ளது.

பண்பொழி திரௌபதி அம்மன் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):ஸ்ரீ தர்மர் சமேத திரௌபதி அம்மன் திருக்கோயில்
பெயர்:பண்பொழி திரௌபதி அம்மன் கோயில்
அமைவிடம்
ஊர்:பண்பொழி
மாவட்டம்:தென்காசி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திரௌபதி
உற்சவர்:தர்மர், திரௌபதி
சிறப்பு திருவிழாக்கள்:ஆடி மாத தீ மிதி திருவிழா

வரலாறு தொகு

 
சேனைத் தலைவர் கோமரத்தார்கள் சமுதாய நலக்கூடம்

மகாபாரத கதை மாந்தர்களில், பாண்டுவின் மைந்தர்களில் முதலாமரான தர்மருக்கும் ஐவர்களின் பத்தினியாம் பாஞ்சாலி (எ) திரௌபதிக்கும் கோவில் கட்டி வணங்கி வருகின்றனர், சேனைத் தலைவர் கோமரத்தார்கள் என்ற பிரிவினர்.

சமத்துவக் கோவில் தொகு

 
முகமதியர் சமாதி

தர்மர் சமேத திரௌபதி அம்மன் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் கிழக்குப்பக்கத்தில் முகமதியரின் சமாதி ஒன்றும் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் கோவிலைச் சுற்றிவரும் பக்தர்கள் இந்த முகமதியரின் சமாதியையும் சுற்றி வணங்கி வருகின்றனர்.

ஆதாரங்கள் தொகு


வெளி இணைப்புகள் தொகு