பதநையா என்பது குடிதொம்பரா இனமக்கள்‌ பேசுகின்ற மொழியாகும். [1] இம் மொழிக்கு எழுத்துவடிவம் இல்லை. இம்மொழி பேச்சுவழக்கில் மட்டுமே உள்ளது.

குடிதொம்பரா இனமக்களில் பதநையா மொழி பேசுகிறவர்களை பதநையா மக்கள் என பிரிவாக இனம் காணுகிறார்கள். இம்மொழி கரடுமுரடான ஒலி அழுத்தங்களோடு உள்ளதாகவும், அவர்கள் உரையாடுவதை கேட்கும் போது நரிக்குறவர் சமூக மக்களின் மொழியோடு ஒத்துள்ளதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். [1]

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 குடிதொம்பரா இனமக்களின்‌ குலதெய்வங்களும்‌ வழிபாட்டு முறைகளும்‌ - முனைவர்‌ முல்லை வீ.சண்முகம்‌ | நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளும்‌ நம்பிக்கைகளும்‌ - தொகுப்பு இரா. சந்திரசேகரன்‌ பக்கம் - 260
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதநையா&oldid=3720146" இலிருந்து மீள்விக்கப்பட்டது