நரிக்குறவர்

நரிக்குறவர் (Narikuravar) எனப்படுவோர், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி பழங்குடி சமூகம் ஆகும். இவர்கள் பாரம்பரிய உண்டிகோலால் குருவி அடிப்பது, நரி பிடிப்பது மற்றும் மலை சாரல் பகுதியில் வாழ்ந்தவர்கள். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக மணிகள் தயாரித்தல் மற்றும் விற்பது போன்ற மாற்றுத் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.

நரிக்குறவர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
வாக்ரி போலி, தமிழ்
சமயங்கள்
ஆன்ம வாதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இந்தோ ஆரிய மக்கள்

இவர்கள் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி போன்ற சிறு பொருட்களை விற்கும் தொழிலைச் செய்து வருகின்றனர். நரிக்குறவர் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள்.

நரிக்குறவர் மக்களை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்திய நடுவண் அரசின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஆனால் இன்னும் சேர்க்கப்படவில்லை.

பேசும் மொழிகள்

இவர்கள் தமிழ், இந்தி, மராத்தி கலவையான பேச்சு வழக்கு பேசுகின்றனர். இவர்களின் நாடோடி கலாச்சாரத்தின் காரணமாக வாக்ரி போலி என்ற புதிய மொழி உருவானது.

சமூகம்

 
சேகர் என்கிற பேட்டை நரிக்குறவர்

இவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு அற்றவர்கள். எனினும், சுகாதாரத்தில் கவனம் உடையவர்கள். காண்பதற்கு சுத்தமில்லாமல் இருந்தாலும், இவர்கள் வாழையடிவாழையாக உட்கொள்ளும் நாட்டுமருந்துகள், இவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைத் தருவர். ஆண்கள் துப்பாக்கிச் சுடுவதிலும், கவண்வில்லிலும் (உண்டிவில்) திறமை மிக்கவர். பெண்கள் கலை வேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தோர் ஆவர்.

தோற்றத்தொன்மம்

 
மணிகளை விற்கும் நரிக்குறவர் கடை

இந்த சமூக பெண்கள் கழுத்தில் வண்ணமயமான பாவாடை மற்றும் மணிகளை அணிந்திருந்தனர். ஆண்கள் நீண்ட முடியை வைத்திருப்பார்கள். இந்த மக்கள் காட்டில் வாழ்ந்தனர். அவர்கள் விலங்குகளையும், பறவைகளையும் சாப்பிடுவார்கள். வழிபாட்டு முறையில் சிவனை முழு முதற் கடவுளாகக் கொண்டாலும் (தாதாஜி) சடங்குகளில் காளி, ஈஸ்வரி, மாரியம்மன், துர்க்கை என்று பெண் கடவுளர்களுக்கே முக்கிய இடமிருக்கிறது. சடங்குகளின் அர்ப்பணிப்பு தேவியரையே சேருகிறது. அதேபோல தேவியரே குறிசொல்லும் பூசாரியில் தோன்றி சனங்களுக்குத் தீர்வு வழங்குகிறாள். நரிக்குறவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான வழிபாட்டு முறை – எருமைப் பலியிடல்.

வாழ்வுமுறை

  • நரிக்குறவர் பாரம்பரிய வேட்டைக்காரர்கள்.
  • இவர்கள் வாழ்வாதாரத்திற்காக பயணிக்கிறார்கள். இவர்கள் எல்லா மாநிலங்களிலும் உள்ள பெரிய கோயில்களுக்குச் சென்று தங்கள், ஊசி, பாசி, மணிகளைக் கொண்ட ஆபரணங்களை விற்று சீசன் முடிந்ததும் வீடு திரும்புவார்கள்.
  • பச்சை குத்துவதும் இவர்களின் தொழில்களில் ஒன்றாக இருக்கிறது.
  • நரிக்குறவர் கூடாரங்களில் வசிப்பவர்கள். அரசின் முயற்சியால், இவர்களுக்கு இலவச வீடும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்படுகின்றன.

சிறப்பு

  • முதியோர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். முதியோர்கள் வகுக்கும் கட்டுப்பாட்டை இவர்களில் படித்தோர் உட்பட அனைவரும் ஏற்கின்றனர்.
  • திருமணத்தில் ஆண்களே, பெண்கள் குடும்பத்திற்கு பரிசப்பணம் தரவேண்டும்.
  • வேற்று சமூகப் பெண்களைக் கிண்டல் கேலி செய்வதில்லை.[1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரிக்குறவர்&oldid=2996851" இருந்து மீள்விக்கப்பட்டது