பதிபசுபாசப் பனுவல்

பதி பசு பாசம் என்பன சைவ சித்தாந்தக் கோட்பாடு. மறைஞான சம்பந்தர் 16 ஆம் நூற்றாண்டில் எழுதிய நூல்களில் ஒன்று பதிபசுபாசப் பனுவல். 337 குறட்பா கொண்டது. இது சைவசித்தாந்த சாத்திரம். 7 இயல்கள் கொண்டது. பாயிரம், பிரமானம், பதி, பசு, பாசம், பொது, போதகம் என்பன அந்த இயல்கள். இந்த நூலில் சில பகுதிகள் சிதைந்துபோயின.

பாடல்கள் – எடுத்துக்காட்டு [1]

ஆகம் சடம்காண் அணு அறியாது இவ்விரண்டின்
யோகம் சிவனால் என்று ஓர்.

வேண்டுவார் இல்லை விலங்கு ஒருவன் கால் இலது
பூண்டுறில் பூண்பித்தான் உண்டு.

பூட்டுவித்தான் தாள் பணியப் போம் விலங்கு புன் குலம்பை
கூட்டுவித்தான் தாள் பணி போம் கூடு

சித்திரம் என்னச் சிலை என்னச் செத்திருப்பார்
வித்தகள் தாள் கட்டுள் விடார்.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. பொருள் நோக்கில் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிபசுபாசப்_பனுவல்&oldid=2072145" இலிருந்து மீள்விக்கப்பட்டது