பதிமூன்று கண்ணறை பாலம்
பதிமூன்று கண்ணறை பாலம் (Pathimoonnu Kannara Bridge) இந்தியாவில் கேரள மாநிலம் கொல்லம்-செங்கோட்டை இரயில் பாதையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரித்தானிய காலத்து கட்டமாகும். "13 வளைவுப் பாலம்" என்றும் இது அழைக்கப்படுகிறது,[1][2][3] கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கழுத்துருட்டியில் இப்பாலம் அமைந்துள்ளது.[4] இந்தியாவின் பழமையான மலை ரயில் பாதைகளில் ஒன்றான இந்த பாலம் 1904 ஆம் ஆண்டு கொல்லத்தில் இருந்து சென்னைக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.[5] வெறும் பாறைகள், சுண்ணாம்புக்கல் மற்றும் வெல்லம் போன்ற பொருள்களைக் கொண்டு 13 வளைவுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இரண்டு மலைகளை இணைக்கும் இப்பாலம், சுமார் 100 அடி உயரமுள்ள பதின்மூன்று கிரானைட் தூண்களால் தாங்கப்பட்டுள்ளது.[6] ஒருபுறம் கழுத்துருட்டி ஆறு மற்றும் மறுபுறம் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை எண் 744 ஆகியவற்றால் இந்தப் பாலம் இணைக்கப்பட்டுள்ளது.
பதிமூன்று கண்ணறை பாலம் Pathimoonnu Kannara Bridge | |
---|---|
പതിമൂന്ന് കണ്ണറപ്പാലം | |
[[Image: |px|alt=|பதிமூன்று கண்ணறை பாலம் Pathimoonnu Kannara Bridge]] | |
புதுப்பிக்கப்பட்ட பின்னர் பாலத்தின் தோற்றம் | |
பிற பெயர்கள் | 13 வளைவு பாலம் |
போக்குவரத்து | இந்திய இரயில்வே |
தாண்டுவது | கழுத்துருட்டியில் உள்ள பள்ளத்தாக்கு |
வடிவமைப்பு | வளைவுப் பாலம் |
கட்டுமானப் பொருள் | பாறைகள், சுண்ணாம்ப்புக் கற்கள் மற்றும் வெல்லம் |
மொத்த நீளம் | 102.72 மீட்டர்கள் (337.0 ft) |
உயரம் | 5.18 மீட்டர்கள் (17.0 ft) |
கட்டுமானம் தொடங்கிய தேதி | 1900 |
கட்டுமானம் முடிந்த தேதி | 1903 |
அமைவு | 8°58′03″N 77°05′27″E / 8.96738°N 77.09084°E |
படக்காட்சி
தொகு-
புதுப்பித்தலுக்கு முன்னர் மழைக்காலத்தில் பாலத்தின் காட்சி).
-
புதுப்பித்தலுக்கு முன்னர் கோடைக்காலத்தில் பாலத்தின் காட்சி).
மேற்கோள்கள்
தொகு- ↑ "The ancient heritage behind our railway bridges". Rediff.
- ↑ "Thenmala, India's First Planned Eco-Tourism Destination Is Full of Scenic Surprises". The better India.
- ↑ "Meter Gauge viaduct on the Quilon-Tenkasi line". Google Arts & Culture.
- ↑ "Lesser Known Kerala Mountain Railways: Treat for Nature Lovers!". Be on the road.
- ↑ "Vestibule between ages going out of view". The Hindu.
- ↑ "New train to Chennai to cut travel by 3 hours". Deccan Chronicle.