பதுளை தொடருந்து நிலையம்
பதுளை தொடருந்து நிலையம் இலங்கையின் ஊவா மாகாணத்தின் தலைநகரான பதுளையில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது முதன்மை வழித்தடத்தின் கடைசி நிலையமாகும். கொழும்பிலிருந்து 292.3 km (181.6 mi) தொலைவில் அமைந்துள்ள இந்நிலையம் சராசரி கடல் மட்டத்திற்கு மேல் 652.43 m (2,140.5 அடி) இல் அமைந்துள்ளது. பதுளை நகர மத்தியிலிருந்து சுமார் 1 km (0.62 mi) தூரத்திலுள்ளது. முதன்மை வழித்தடத்தில் இயங்கும் பொடி மெனிகே மற்றும் உடரட்ட மெனிகே விரைவு தொடருந்து வண்டிகள் உட்பட பல தொடருந்துகள் இந்த நிலையத்தில் முடிவடைகின்றன.
பதுளை தொடருந்து நிலையம் ஆங்கிலம்: Badulla railway station சிங்களம்: බදුල්ල දුම්රිය ස්ථානය | |
---|---|
பதுளை தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | பதுளை தொடருந்து நிலையம், பதுளை நாவலப்பிட்டி இலங்கை |
ஆள்கூறுகள் | 6°58′47″N 81°03′35″E / 6.9798°N 81.0598°E |
இயக்குபவர் | இலங்கை தொடருந்து போக்குவரத்து |
தடங்கள் | முதன்மை வழித்தடம் |
தொலைவு | கொழும்பில் இருந்து 292.3 km (181.6 mi) |
நடைமேடை | 3 பக்க நடைமேடை |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | At-grade |
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | BAD |
பயணக்கட்டண வலயம் | பதுளை |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1924 |
நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான பாதையின் கட்டுமானம் 1924 இல் நிறைவடைந்தது. பயணிகள் போக்குவரத்து 1924 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.[1] இருப்பினும் நிலையம் உத்தியோகபூர்வமாக ஏப்ரல் 5, 1924 வரை திறக்கப்படவில்லை. மலையக தொடருந்துப் பாதையின் கடைசி நிலையம் இதுவாகும். மேலும் இந்த நிலையம் தொடருந்து இயந்திரத்தைத் திருப்பக்கூடிய திருப்பு மேசை ஒன்றைக் கொண்டுள்ளது. இந்த நிலையத்தில் தொடருந்து நிலைய அதிபர், சிறு பணியாளர்கள், உதவி ஊழியர்கள் என சுமார் 100 பேர் பணிபுரிகின்றனர். இந்த நிலையம் மலையகத் தொடருந்துப் பாதையின் மிக அழகான நிலையங்களில் ஒன்றாகும்.