பத்தர் என்பது யாழ் நரம்பின் ஒலியைப் பெருக்கும் முறையில் குடவடிவாகவும் தோணி வடிவாகவும் மகாமீன் வடிவாகவும் அமைக்கப்பெறும் யாழின் அடிப்பகுதியாகும்.[1] இது குமிழ், தனக்கு, முருக்கு என்னும் மரங்களாற் செய்யப் பெறும். இக்காலத்தில் வீணையில் குடம் என வழங்கப் பெறும் உறுப்பினை யொத்ததே பழைய யாழில் அமைந்த பத்தர் என்னும் உறுப்பாகும். பத்தருடன் இணைக்கப் பெற்று நரம்புகள் கட்டப்பெறுதற்கேற்ப வளைந்த மரத்தண்டு கோடு என்னும் உறுப்பாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்றான, பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் எழுதிய இசைத்தமிழ் என்ற நூல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தர்&oldid=3085220" இலிருந்து மீள்விக்கப்பட்டது