பத்மசிறீ குடுமுலா

பத்மசிறீ குடுமுலா (Padmashree Kudumula) ஓர் ஆசிரியரும், நெல்லூர் மக்களவைத் தொகுதி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் 10வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினர் ஆவார்.

பத்மசிறீ குடுமுலா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1991 - 1996
முன்னையவர்புச்சாலபள்ளி பென்சாலையா
பின்னவர்பானபாகா லட்சுமி
தொகுதிநெல்லூர்

இளமை

தொகு

குடுமுலா 1961 செப்டம்பர் 24 அன்று நெல்லூர் மாவட்டத்தில் குடுமுலா மீரையா என்பவருக்கு மகளாகப் பிறந்தார். நெல்லூரில் உள்ள வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் கல்வியியலில் இளநிலைப் பட்டம் பெற்று அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[1]

தொழில்

தொகு

அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு குடுமுலா ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] இவர் ஒரு சமூக ஆர்வலர். இவர் ஓதுக்கப்பட்ட சமூகங்களுக்குக் கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகிறார். 1986ஆம் ஆண்டில், இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினரானார். 1991ஆம் ஆண்டில், குடுமுலா நெல்லூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 10ஆவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிகாரப்பூர்வக் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் தனது நெருங்கிய போட்டியாளரான தெலுங்கு தேசம் கட்சி எம். நாகபுசனம்மாவை எதிர்த்து 2,68,626 வாக்குகளைப் பெற்றார். நாகபுசனம்மா 44,857 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.[3] இவர் சபையில் இருந்த காலத்தில், 73ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கான கூட்டுக் குழுவில் பணியாற்றினார்.[4]

குடுமுலா 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான இந்திய தேசிய காங்கிரசு தனது அதிகாரப்பூர்வ வேட்பாளராக லட்சுமி பனபாகாவை நியமித்தது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Members Bioprofile: Kudumula, Kumari Padmashree". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
  2. Singh, H. D. (1996). 543 faces of India: guide to 543 parliamentary constituencies. Newmen Publishers. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190066907.
  3. "Statistical Report on the General Elections, 1991 to the Tenth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 26. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
  4. Parliamentary Committee: Summary of Work. Lok Sabha Secretariat. 1991. p. 83.
  5. "Statistical Report on the General Elections, 1996 to the Eleventh Lok Sabha" (PDF). Election Commission of India. p. 195. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மசிறீ_குடுமுலா&oldid=4116128" இலிருந்து மீள்விக்கப்பட்டது