பானபாகா லட்சுமி

இந்திய அரசியல்வாதி

டாக்டர் பானபாகா லட்சுமி (Panabaka Lakshmi; பிறப்பு: அக்டோபர் 6, 1958) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சரும் (2004-2014) ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் பப்பாட்லா தொகுதியைச் சேர்த்த இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.

டாக்டர் பானபாகா லட்சுமி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னையவர்டகுபதி புரந்தேசுவரி
பின்னவர்மால்யத்ரி சிரிராம்
தொகுதிபபத்லா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 6, 1958
கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பனபாகா கிருட்ணய்யா
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்நெல்லூர்
As of மே 12,, 2006
மூலம்: [1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

டாக்டர். பனாபக லட்சுமி, நெல்லூர் மாவட்டம் (ஆந்திரப்பிரதேசம்), கவாலி என்ற இடத்தில் பிறந்தார். டாக்டர். கிருட்ணய்யாவைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

தொழில்

தொகு

நெல்லூரில் இருந்து 11, 12, 14 வது மக்களவைக்கும், மற்றும் பபத்லாவில் இருந்து 15 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் யு.பி.ஏ. அரசாங்கத்தில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (2004-09), பெட்ரோல் இயற்கை எரிவாயு அமைச்சகம், சவுளித் துறை அமைச்சகம் (2009-14) ஆகியவற்றிற்கு மாநில அமைச்சராக இருந்தார்[1].

மேற்கோள்கள்

தொகு
  1. "Minister of State". Ministry of Petroleum and Natural Gas. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானபாகா_லட்சுமி&oldid=3220379" இலிருந்து மீள்விக்கப்பட்டது