பத்மநாபன் செங்கல்வராயன்

செங்கல்வராயன் பத்மநாபன் ஒரு ஆய்வாளர், எழுத்தாளர்.

பத்மநாபன் செங்கல்வராயன்
18th October 1953
புனைபெயர்ப. செங்கல்வராயன்
தொழில்எழுத்தாளர், ஆய்வாளர்
தேசியம்இந்தியா
குடியுரிமைIndian
கல்வி நிலையம்அழகப்பா பல்கலைக்கழகம்

மற்றும் தமிழ் நாடு சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் துணைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆவார். தமிழ் நாடு, திருவண்ணாமலை மாவட்டம், மூடூர் என்னும் கிராமத்தில் 18 அக்டோபர் 1953 அன்று முனைவர் ப. செங்கல்வராயன் பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

கணிதவியல் மற்றும் கல்வியியலில் இளங்கலைப்பட்டம் பெற்ற பின் தமிழ்நாடு அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கல்லூரியில் தலைமை எழுத்தராக ஜனவரி 1977 இல் செங்கல்வராயன் தனது பணியினைத் துவங்கினார்.

தொழில் தொகு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1983 இல் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1999 இல் மகளிர் படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றார்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிருவாக அலுவலராக 33 ஆண்டுகள் 9 மாதங்கள் பணியாற்றி பணி நிறைவெய்தினார். தற்போது சென்னை மதுரவாயல் டாக்டர் எம். ஜி. ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றது) நிருவாக அலுவலராக (துணைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்) நவம்பர் 2010 முதல் பணியாற்றி வருகிறார்.

வெளியிட்ட புத்தகங்கள் தொகு

செங்கல்வராயன் கீழ்க்கண்ட நூல்களை இயற்றியுள்ளார்:

1. மகளிர் கணிதவியலாளர்கள் அவர்தம் பங்களிப்புகள்: ஒரு விமர்சனம் (புதுடெல்லி ரீகல் பதிப்பகம், 2007)

2. வியத்தகு எண்கள் உலகம் (புதுடெல்லி ரீகல் பதிப்பகம், 2012)

மகளிர் தம் அறிவு சார் திறன்களைப்பற்றி அவர் குறிப்பிடும்போது " மகளிர் தம் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட கால கட்டத்திலேயே ஆண்கள் ஆதிக்கம் பெற்ற கணிதம் போன்ற பாடப்பிரிவுகளில் ஆண்களுக்கு நிகராகவோ அல்லது சில நிலைகளில் ஆண்களை விடச் சிறந்து விளங்கக்கூடியதாகவோ தம் அறிவு சார் திறன்களை மகளிரால் நிறுவ முடிந்தது".

கணிதப்பாடம் கற்றலின் பல்வேறு நிலைகளில் புரிந்து கொள்ளுதல் பற்றி அவர் குறிப்பிடும் போது "மாணவர் தம் கணிதத்தில் செயல் திறனை ஊக்குவிக்குமுகமாக கணிதப்பாடப்பகுதியினை அது தொடர்பான வரலாற்றையும் சேர்த்து பயில்விப்பது அவசியமானதாகும். இதனால் கணிதம் கற்றலில் மாணவர்களுக்கு அதிக ஊக்கம் ஏற்படுவதோடு கணிதத்தில் அடிப்படை ஆய்வுகள் நிகழ்த்த அவர்களைத் தூண்டவும் செய்யும்."


ஆய்வுப்பணிகள்: தொகு

கணிதம், கல்வியியல், மேலாண்மை, மகளிர் கல்வி மற்றும் சூழ்நிலைக்கல்வி ஆகிய பன்முகப்பாடப்பிரிவுகளில் கீழ்க்கண்ட

ஆய்வு அறிக்கைகள் உள்ளடக்கிய தனது ஆய்வுப்பங்களிப்பை நிகழ்த்தியுள்ளார்.

* பிதகோரியன் மும்மைகள் - ஒரு வரலாற்றுப்பார்வை, Mathematical Education, 9, 108-110 (1992)

* இரு தொடர் இயற்கை எண்களைப்பற்றிய உண்மைகள், The Mathematics Teacher, 28, 138-139 (1993)

* பல்கலைக்கழக நிருவாகத்தில் கணினிகளின் பயன்பாடுகள், Electronics For You, 39-42 (1995)

* பல்கலைக்கழகங்களில் ஆய்வுப்பணிகளை மேம்படுத்தும் உபாயங்கள், Journal of Higher Education, 20, 395-401 (1997)

* கல்வி நிறுவனங்களில் சுற்றுச்சூழல் பாது காக்கும் முறைகள் - இத்தலைப்பில் மதுரை அகில இந்திய வானொலியில் 8.10.1996, 18.10.1996 மற்றும் 28.10.1996 ஆகிய தேதிகளில் நிகழ்த்தப்பட்ட உரை.

* ஸ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கையும்  பணிகளும் - இத்தலைப்பில்  மதுரை அகில இந்திய வானொலியில் 05.05.1997 அன்று நிகழ்த்தப்பட்ட உரை.

* மற்றும் கணிதத்தில் தூய வடிவியல் தொடர்பான உண்மைகள் புரிதலில் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள்.

குறிப்புகள் தொகு

1. ^ Jump up to:a b "Chengalvarayan Padmanaban". World Book of Researchers. 2018-06-11. Retrieved 2019-05-19.

2. ^ Jump up to:a b "Chengalvarayan Padmanaban | M.A., Ph.D. | Dr. M.G.R. University, Chennai | Examination Cell". ResearchGate. Retrieved 2019-05-19.

3. ^ "Women Mathematicians, Their Contributions: A Critique" (PDF). 2007.

4. ^ "9788189915728: Women Mathematicians: Their Contributions - AbeBooks - P. Chengalvarayan S. Gokilavani: 818991572X". www.abebooks.com. Retrieved 2019-05-19.

5. ^ Chengalvarayan, P; Gokilavani, S (2007). Women mathematicians : their contributions : a critique. New Delhi : Regal. ISBN 9788189915728.

6. ^ "Download Books by Robert P Gwinn". Free E-Book Download. Retrieved 2019-05-19.

7. ^ "The Fascinating World Of Numbers by Chengalvarayan P.: Regal Publications 9788184841886 - Majestic Books". www.abebooks.com. Retrieved 2019-05-19.

8. ^ "P Chengalvarayan - AbeBooks". www.abebooks.co.uk. Retrieved 2019-05-19.

9. ^ "Fascinating World of Numbers".

10. ^ "ASSIST WORLD RECORDS". www.assistworldrecords.com. Retrieved 2019-05-19.

11. ^ Congress, The Library of. "LC Linked Data Service: Authorities and Vocabularies (Library of Congress)". id.loc.gov. Retrieved 2019-05-19.

நூல்தொகை:

• Chengalvarayan, P.; Gokilvani, Srinivasan (1 January 2007). Women mathematicians: their contributions, a critique. Regal Publications. ISBN 978-81-89915-72-8.

• Chengalvarayan, P. (2012). The Fascinating World of Numbers. Regal Publications. ISBN 9788184841886.