பத்மபுரம் தோட்டம்

பத்மாபுரம் தோட்டம் (Padmapuram Gardens) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சுற்றுலாத்தலமாகும். இரண்டாம் உலகப் போரில் போராடிய வீரர்களுக்குக் காய்கறிகள் வழங்குவதற்காக 26 ஏக்கர் நிலப்பரப்பில் 1942ஆம் ஆண்டு இத்தோட்டம் நிறுவப்பட்டது. போருக்குப் பிறகு, இது ஒரு தோட்டக்கலை நாற்றங்கால் மற்றும் பயிற்சி மையமாக மாற்றப்பட்டது. இங்கு அமைந்துள்ள பழத்தோட்டங்கள், அரிய வகை மலர்கள் மற்றும் மரங்கள், மர வீடுகள் மற்றும் கல் சிற்பங்கள் சுற்றுலா அமசங்களாக உள்ளன.[1]

பத்மபுரம் தோட்டத்தின் நுழைவாயில்

அமைவிடம்

தொகு

புகழ்பெற்ற பத்மபுரம் தோட்டம் அரக்கு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அரக்கு தொடருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Padmapuram Gardens, Araku Valley - Timings, Entry Fee, Best time to visit". Trawell.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மபுரம்_தோட்டம்&oldid=4109740" இலிருந்து மீள்விக்கப்பட்டது