பத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது

பத்ம்பூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது (Dr. Moturi Satyanarayan Award, தேவநாகரி: पद्मभूषण डॉ. मोटूरि सत्यानारायण पुरस्कार) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பான கேந்திரிய இந்தி சன்சுதான் ஆண்டுதோறும் இந்தி இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்கு வழங்கும் ஓர் விருதாகும். இந்திமொழியின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு பெரும் இந்தி மொழி ஆர்வலர் மோடுரி சத்யநாராயண் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது. முதல் விருது 2002ஆம் ஆண்டு அரிசங்கர் ஆதேசிற்கு வழங்கப்பட்டது.

பத்ம்பூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது
Padmabhushan Dr. Moturi Satyanarayan Award
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்தி மொழி வளர்ப்பு (1 தனிநபர்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 2002
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 6
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்சுதான், இந்திய அரசு
விவரம் இலக்கியம்
முதல் வெற்றியாளர்(கள்) அரிசங்கர் ஆதேஷ்
கடைசி வெற்றியாளர்(கள்) உஷா பிரியம்வதா

விருது பெற்றோர் தொகு

ஆண்டு பெயர் நாடு
2002 அரிசங்கர் ஆதேசு
2003 பி. செயராமன்
2004 பேரா. யமுனா கச்ரூ
2005 கிருஷ்ணா கிசோர்
2006 பிரேம் லதா வர்மா
2007 உஷா பிரியம்வதா அமெரிக்கா

வெளியிணைப்புகள் தொகு