பத்மா
பத்மா (Padma) பிரித்தானிய இந்தியாவின் முந்தைய சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாக விளங்கிய திருச்சிராப்பள்ளி மாவட்டம் உப்பிலியாபுரத்தில் இருந்த ஒரு மருத்துவர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 1945 ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மு.செங்கமலத்தின் மகளான இவர், 1966 ஆம் ஆண்டு சி.நம்மாழ்வார் என்பவரை மணந்தார்.[1]தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்தார்.[1]
இந்திய தேசிய காங்கிரசு 1991 ஆம் ஆண்டு இந்திய பொதுத்தேர்தலில் நாகப்பட்டினம் தனிதொகுதிக்கு மருத்துவர் பத்மாவை வேட்பாளராக நிறுத்தியது.[2] 49.71% வாக்குகளைப் பெற்று இந்திய பொதுவுடமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராசுவை தோற்கடித்து பத்மா வெற்றி பெற்றார்.[2]சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண்மணி பத்மா ஆவார்.[3]
பத்மா 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நன்னிலம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]இந்ததொகுதி பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்டது.[4]தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் வேட்பாளராக பத்மா நின்றார்.[4]
2001 ஆம் ஆண்டு நடைபெற இருந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நன்னிலத்தில் மருத்துவர் பத்மாவை மீண்டும் வேட்பாளராக நிறுத்துவதில் தமிழ் மாநிலகாங்கிரசு கட்சித்தலைமைக்கு சந்தேகம் இருப்பதாக செய்தி வெளியானது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 C. K. Jain (1993). Women parliamentarians in India. Published for Lok Sabha Secretariat by Surjeet Publications. p. 756.
- ↑ 2.0 2.1 Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1991 TO THE TENTH LOK SABHA – VOLUME I (NATIONAL AND STATE ABSTRACTS & DETAILED RESULTS) பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ The Hindu. Only 2 women MPs from central districts
- ↑ 4.0 4.1 4.2 "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 9. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ The Hindu. Sulking senior TMC leaders given ticket[தொடர்பிழந்த இணைப்பு]