பத்மாநாபன் கோபாலன்

பத்மாநாபன் கோபாலன், (Padnabhan Gopalan) 2019-ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் நிறுவனம், இவரை ஆசிய மண்டலத்திற்கான சிறந்த இளைஞராக தேர்வு செய்து, 14 மார்ச் 2019 அன்று இலண்டனில் நடைபெற்ற விழாவில், இவருக்கு சான்றிதழ் மற்றும் 3,000 பவுண்டு வழங்கி சிறப்பித்துள்ளது.[1][2]

வறுமை, பாலின சமத்துவம், மனித உரிமைகள், தூய நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்வற்றில் நீடித்து நிலைக்கும் வளர்ச்சி இலக்குகளை கொண்டு செயல்பட்டு, சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் 15 - 29 வயது இளைஞர்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

ஆசியா, பசிபிக், கரீபியன், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 15-29 வயதிற்குட்பட்ட இளைஞர்களில், பிராந்தியத்திற்கு ஒருவருக்கு ஆண்டுதோறும் சிறந்த இளைஞர் விருதினை காமன்வெல்த் அமைப்பு வழங்கி வருகிறது.[3]

பத்மநாபன் கோபாலனின் தன்னார்வத் தொண்டு

தொகு

தமிழ்நாட்டின் சேலத்தில் பிறந்து கோயம்புத்தூரில் பொறியியல் படிப்பு முடித்த 25 வயது இளஞர். இவர் அக்டோபர் 2015-ஆம் ஆண்டில் உணவு பொருள் வீணாக்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பசியில்லாத இந்தியா எனும் (நோ ஃபுட் வேஸ்ட்) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார். விழாக்கள் மற்றும் விருந்துகளில் மீதமான உணவுப் பொருள்களை பெற்றுக் கொண்டு, உணவின்றி பசித்திருப்பவர்களுக்கு வழங்க உதவியாக திறன்பேசி செயலியை உருவாக்கினார். தற்போது மீதமான உணவை அளிப்பவர்களையும், பசியால் வாடுபவர்களையும் இணைக்கும் திறன்பேசி செயலியை மதுரை நீங்கலாக தமிழகத்தின் மற்ற அனைத்து மாநகரங்களையும் சேர்ந்த 12,000 மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. பசியில்லா இந்தியா: காமன்வெல்த் அமைப்பின் விருதை வென்று தமிழக இளைஞர் சாதனை
  2. This young entrepreneur makes city proud
  3. "Commonwealth Youth Awards". Archived from the original on 2019-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  4. Being the change: Stop that dumping

வெளி இணப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மாநாபன்_கோபாலன்&oldid=3561780" இலிருந்து மீள்விக்கப்பட்டது