பத்மினி பிரகாஷ்

இந்தியச் செய்தி தொகுப்பாளர், நடிகர், திருநங்கைகள் உரிமை ஆர்வலர்

பத்மினி பிரகாஷ் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை, செய்தி தொகுப்பாளர், திரைப்பட நடிகை மற்றும் திருநங்கைகள் உரிமை செயற்பாட்டாளராவர். 2014 ஆம் ஆண்டு சுதந்திரத்தினத்தன்று தமிழ் செய்தி தொலைக்காட்சியான தாமரை தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி, முதல் இந்திய செய்தி தொகுப்பாளினி திருநங்கை என்ற பெயரைப் பெற்றுள்ளார். இவர் பரத நாட்டிய ஆசிரியாரகவும் உள்ளார். தற்போது, கோயம்புத்தூரிலுள்ள கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, சுயநிதிப்பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். [1]

பத்மினி பிரகாஷ்
தேசியம்இந்தியர்
பணிசெய்திவாசிப்பாளர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

பத்மினி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள பழமைவாத தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். [2] இவரது பதிமூன்றாம் வயதிலேயே தன்னுடைய பிறப்பு பாலின அடையாளத்தை நிராகரித்துள்ளார். அதற்காக மொத்த குடும்பத்தின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். தொடர்ந்து தனது பதினாறு வயதில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின்னர் தனது குடும்பத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளார்.[3] [4] வீட்டை விட்டு வெளியேறிய பத்மினிக்கு அவரது உறவினரும், பள்ளி நண்பருமான நாகராஜ் பிரகாஷ் ஆதரவளித்துள்ளார். தனது பள்ளிக் கல்வியை முடித்துள்ள பத்மினி, வணிகத்தில் இளங்கலை பட்டப்படிப்புக்கான தொலைதூரக் கல்விக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனாலும் நிதிப் பின்னடைவுகள் மற்றும் பாலின அடையாளத்திற்கான பாகுபாடு மற்றும் கொடுமைப்படுத்துதல் காரணமாக இரண்டாம் ஆண்டிலேயே அதை கைவிட வேண்டிய கட்டாயத்தால் தொடரவில்லை.  [5]

பத்மினி,  2004-ஆம் ஆண்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததோடு, அதே ஆண்டில் அவரது காதலரான, பிரகாஷை திருமணம் செய்து கொண்டுள்ளார்.  பத்மினி - நாகராஜ் தம்பதிக்கு ஜெயா என்ற ஆண் மகனை தத்தெடுத்துள்ளனர். பொற்கொல்லரான அவரது கணவர், பத்மினியை ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று விரும்பினாலும், அவர்களின் பொருளாதாரப் பின்னடைவு காரணமாக அந்த கனவை நிறைவேற்ற முடியவில்லை.[6]

வேலைகள்

தொகு

2014 ஆம் ஆண்டு சுதந்திரத்தினத்தன்று தமிழ் செய்தி தொலைக்காட்சியான தாமரை தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் முறைப்படி பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர் என்பதால், பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும் இருந்துள்ளார். [7]

விருதுகள்

தொகு
  • திருநங்கைகளுக்கான பல்வேறு அழகுப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றியும் பெற்றுள்ளார். 2009 இல் மிஸ் திருநங்கை இந்தியா மற்றும் 2007 இல் மிஸ் திருநங்கை தமிழ்நாடு போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். [8]
  • இவருக்கு தேனித் தமிழ்ச் சங்கம், “சொற்சுவைத் தேனீ விருது” வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.[9]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மினி_பிரகாஷ்&oldid=4084689" இலிருந்து மீள்விக்கப்பட்டது