பத்ரகடவு அருவி

கேரளாவிலுள்ள அருவி

பத்ரகடவு அருவி (Pathrakadavu waterfalls) இந்தியாவின் கேரளாவிலுள்ள பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் அமைந்திருக்கும் ஒரு அருவியாகும். இந்த சுற்றுலா இடம் பத்ரகடவிலுள்ள குருதிச்சால் பகுதியில் அமைந்துள்ளது.

பத்ரகடவு அருவி
Pathrakadavu waterfalls
பத்ரகடவு அருவி
அமைவிடம்பாலக்காடு, கேரளா, இந்தியா
வகைஅருவி

நீர்மின் சக்தி திட்டமும் சர்ச்சைகளும்தொகு

இந்த அருவி அமைந்துள்ள ஆற்றில் ஒரு நீர்மின் சக்தி திட்ட முன்வைப்பு இருந்தது.[1] பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களால் ஆற்றில் நீர் மின் திட்டத்தை நிர்மாணிப்பது குறித்து பல போராட்டங்கள் நடந்தன. வனத்துறை கூட இந்த திட்டத்தை எதிர்த்தது.[2]

சுற்றுலாத் திட்டம்தொகு

தற்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையின் அழகைப் பாதுகாக்கின்ற ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்தை அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் செயல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.[3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரகடவு_அருவி&oldid=3370521" இருந்து மீள்விக்கப்பட்டது