பத்ருன்னிசா தாலியா
பத்ருன்னிசா தாலியா (Badrunnesa Dalia ) இவர் ஒரு விருது பெற்ற வங்காளதேச பிரதான நஸ்ருல் கீத்தி மற்றும் ரவீந்திர சங்கீதப் [1] பாடகரும், கலைஞரும் மற்றும் இசை ஆசிரியரும் ஆவார். [2] இவர் பல வகை கலைஞராக (பாடகி) பல்துறைத்திறன் பெற்றவர் ஆவார்.
பத்ருன்னிசா தாலியா | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 1, 1970 நரசிங்கடி, வங்காளதேசம் |
தேசியம் | வங்காளதேசம் |
செயற்பாட்டுக் காலம் | 1983 முதல் தற்போது வரை |
பெற்றோர் | ஏ.எப்.எம் சாமுபாடகர் |
வாழ்க்கைத் துணை | அல்-நூரி பைசூர் ரேஸா ( 1988 முதல் தற்போது வரை) |
பிள்ளைகள் | தமிம் ரேசா ஒமர் ரேசா |
விருதுகள் | வங்காளதேச சிசு அகாதமி தேசிய விருதுகள் (1983,1984) |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுதாலியா 1970இல் நர்சிங்கடியில் பிறந்தார். இவரது மூத்த சகோதரர் ஆசிஃபுல் ஹுடா [3] வங்காளாதேசத்தில் ஒரு கேலிச் சித்திரக் கலைஞர் ஆவார். இவரது தம்பி சுமோன் ரகாத்தும் வங்காளாதேசத்தில் புகழ் பெற்ற ஒரு பாடகராவார். 1988ஆம் ஆண்டில், தாலியா வங்காள தேச ஆட்சிப்பணி அதிகாரத்துவமான அல்-நூரி பைசூர் ரேஸா என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் உஸ்தாத் மொஃபிசுல் இஸ்லாம் மற்றும் அபினாஷ் கோஸ்வாமி ஆகியோரிடமிருந்து பாரம்பரிய இசையின் ஆரம்பப் பயிற்சி பெற்றார். பின்னர், சுதின் தாஸ் மற்றும் சோஹ்ராப் ஹொசைன் ஆகியோரிடமிருந்து நஸ்ருல் சங்கீதத்தைக் கற்றுக்கொண்டார். [4]
தொழில்
தொகுதாலியா 1996 முதல் வங்காளதேச வானொலியான வங்காளதேச பீட்டரின் பாடகியாக இருந்து வருகிறார். [5] மேலும், இவர் 1988 முதல் வங்காளதேச தொலைக்காட்சியின் பட்டியலிடப்பட்ட கலைஞராக இருந்து வருகிறார். வங்காளதேசத்தின் கலாச்சார அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் கல்விக்கூடங்கள் ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பங்களா அகாதமி, ஷில்பகலா அகாதமி, சயனாத், [6] [7] நஸ்ருல் நிறுவனம், நஸ்ருல் அகாதமி, நஸ்ருல் சங்கீத் ஷில்பி பரிஷத், [8] [9] வங்காளதேச சங்க சங்கதன் சமன்னே பரிஷத் , [10] சிறீஜோன் (ஒரு கலாச்சார அமைப்பு), [11] [12] வங்காளதேச ரவீந்திர சங்கீத ஷில்பி ஷாங்காத் போன்ற அமைப்புகலில் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தி வருகிறார். [1] 2004 அக்டோபர் 23 அன்று, தேசிய நாளேடான தி டெய்லி ஸ்டார் அதன் கலாச்சார பக்கத்தின் கீழ் " நஸ்ருல் மற்றும் ரவீந்திரநாத் மீதான ஒரு அரிய ஆர்வம் " என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கட்டுரையை வெளியிட்டது. இவர் ஒரே நேரத்தில் நஸ்ருல் கீதி மற்றும் ரவீந்திர சங்கீதம் ஆகிய இரண்டையும் பயிற்சி செய்து நிகழ்த்துவார்.
சில்பகாலா அகாடமி வளாகத்தில் வங்காளதேச தொலைக்காட்சியின் கலைஞர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் தாலியா பங்கேற்றார். வங்காளதேசத்தின் இரண்டு பாடகர்களான ஷேக் ஜோமிர் உதின் மற்றும் மதன் கோலாப் தாஷ் ஆகியோரின் உயிரைக் காப்பாற்ற சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். [13] [14]
பிஜிஎம்இஏ கோர்போ என்ற பெயரின் தேர்வு சுற்றுகள் உட்பட பல்வேறு இசை திறமையை கண்டறியும் உணமை நிகழ்ச்சிகளின் நடுவராக தாலியா இருந்துள்ளார் . [15] [16]
பாடல்கள்
தொகுஒரு நேரடி கலைஞராக இவர் அதிகம் கவனிக்கப்படுகிறார் என்றாலும், ஷோர்னாலி ஷோந்தே (கோல்டன் ஓல்டிஸ் ) மற்றும் எக்டுகு சோனோயா லாகே (தாகூர் பாடல்கள்) என்ற தலைப்பில் தனி இசைத்தொகுப்புகளை தாலியா வெளியிட்டுள்ளார். "லால் கோலாப்" (நவீன பாடல்கள்), "ஓஷ்ரு ஜோரா பிப்ரவரி", "ஜோன்மோபூமி மா" (தேசபக்தி பாடல்கள்) ஆகிய பல கலப்பு தொகுப்புகளிலும் இவர் பாடல்களை வெளியிட்டுள்ளார். [17]
விருதுகள்
தொகுதாலியா வங்காளதேச சிசு அகாதமி தேசிய விருதுகளை இரண்டு முறை நஸ்ருல் கீதி (1983) மற்றும் ரவீந்திர சங்கீதம் (1984) ஆகியவற்றுக்காக பெற்றுள்ளார். [18]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Alom, Zahangir (29 September 2013). "Exploring the unknown Tagore in songs". The Daily Star. http://www.thedailystar.net/beta2/news/exploring-the-unknown-tagore-in-songs/. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ Rashid, Harun ur Rashid (23 October 2004). "A rare passion for Nazrul and Rabindranath". The Daily Star. http://archive.thedailystar.net/2004/10/23/d410231402103.htm. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ Haq, Fayza (4 May 2005). "Exhibition: Culling of colourful cartoons". The Daily Star. http://archive.thedailystar.net/2005/05/04/d505041402114.htm. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ Rashid, Harun ur Rashid (23 October 2004). "A rare passion for Nazrul and Rabindranath". The Daily Star. http://archive.thedailystar.net/2004/10/23/d410231402103.htm. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ Rashid, Harun ur Rashid (23 October 2004). "A rare passion for Nazrul and Rabindranath". The Daily Star. http://archive.thedailystar.net/2004/10/23/d410231402103.htm. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ "Chhayanaut hosts Nazrul Festival 1416". The Daily Star. 21 June 2009. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=93437. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ Alom, Zahangir (27 May 2012). "Celebrating Nazrul's Creativity; Chhayanaut celebrations". The Daily Star. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=235806. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ Waheed, Karim (19 May 2008). "Celebrating the National Poet; Jatiya Nazrul Sangeet Sammelan at Public Library". The Daily Star. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=37421. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ "Nazrul Sangeet festival begins". Priyo News (online newspaper). 7 June 2011 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304051425/http://news.priyo.com/entertainment/2011/06/07/nazrul-sangeet-festival-begins-28227.html. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ Alom, Zahangir (23 June 2011). "Melody and harmony; World Music Day observed". The Daily Star. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=191083. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ "Songs of yesteryears; Monthly musical soiree by Srijon". The Daily Star. 30 July 2007. http://archive.thedailystar.net/2007/07/30/d707301403156.htm. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ "Patriotic and inspirational songs at Srijon's monthly programme". The Daily Star. 29 December 2008. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=69125. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). The Daily Manob Kantha. 1 July 2013 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304001631/http://www.manobkantha.com/2013/07/01/127931.html. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ (in bn)The Daily Prothom-alo. 1 July 2013. http://www.prothom-alo.com/entertainment/article/17122/%E0%A6%B6%E0%A7%87%E0%A6%96_%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0_%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8_%E0%A6%93_%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%A8_%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2_%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0. பார்த்த நாள்: 24 April 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). Dainik Destiny இம் மூலத்தில் இருந்து 20 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140420061740/http://www.dainikdestiny.com/print_news.php?pub_no=538&cat_id=1&menu_id=6&news_type_id=1&index=3. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). Poriborton.com இம் மூலத்தில் இருந்து 6 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130306031725/http://www.poriborton.com/article_details.php?article_id=13476. பார்த்த நாள்: 24 April 2016.
- ↑ "Badrunnesa Dalia's Songs". Songs. Badrunnesa Dalia. பார்க்கப்பட்ட நாள் 24 April 2016.
- ↑ The Daily Star. http://archive.thedailystar.net/2004/10/23/d410231402103.htm. பார்த்த நாள்: 24 April 2016.