நஸ்ருல் கீத்தி
நசுருல் கீத்தி (Nazrul Geeti, வங்காள மொழி: নজরুল গীতি) அல்லது நசுருல் சங்கீதம் (Nazrul Sangeet, வங்காள மொழி: নজরুল সঙ্গীত, நேரடி மொழிபெயர்ப்பு: "நசுருலின் இசை"), இந்திய விடுதலை இயக்க வீரரும் வங்காளக் கவிஞரும் வங்காள தேசத்தின் தேசியக் கவிஞருமான காஜி நஸ்ருல் இஸ்லாம் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் புரட்சிகர கருக்களைத் தவிர மெய்யியல், சமய, காதல் கருவுள்ள பாடல்களும் இடம்பெற்றுள்ளன.[1] நசுருல் ஏறக்குறைய 4,000 பாடல்கள் (இசைத்தட்டுகளுக்கானவை உட்பட),[2] இயற்றியுளார். இந்தப் பாடல்கள் இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன.
நசுருல் இசுலாமின் இசைப் பாணி
தொகுபுரட்சிகர பரவலிசை
தொகுகாசி நசுருல் இசுலாமின் பரவலிசையும் பாட்டுக்களும் இந்திய விடுதலை இயக்கத்தின் போதும் வங்காளதேச விடுதலைப் போரின்போதும் பரவலாக பயன்படுத்தப் பட்டுள்ளன. மனவெழுச்சியைத் தூண்டும் விதமாக அமைந்துள்ள இப்பாடல்கள் புரட்கர கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் செல்ல பெரிதும் பயன்பட்டன. இப்பாடல் வரிகள் பழமையை எதிர்த்தும் சமயம் மற்றும் மெய்யியலின் விளிம்பில் மனித வாழ்வு குறித்தனவாகவும் உள்ளன. நசுருலின் பரவலிசையில் வெளிப்படுத்தலுக்கு முழுமையான சுதந்திரம் தரப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இருப்பினும் இதன் உட்தன்மையை உணர்ந்தவர்களால் பயமின்மைக்காகவும் நேர்மைக்காகவும் இவரது இசைப்பாணி வரவேற்கப்படுகிறது.
சியாமா சங்கீதம்
தொகுசியாமா சங்கீதம் உருவாக நசுருல் மிகவும் பயனுள்ள பங்களிப்புகளை செய்துள்ளார். இசுலாமிய, இந்து மரபுகளையும் பண்பாட்டையும் நன்கறிந்த நசுருல் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்குமிடையே ஒற்றுமைக்கு வழிகோலினார்.
கசல்
தொகுமரபுவழி பெர்சிய கசல் வடிவத்தில் தேர்ச்சி பெற்ற நசுருல் 1927-28களில் அவ்வடிவத்தில் வங்காளமொழிக் கசல்களை இயற்றினார். இதன் மூலம் வங்காள இசையின் பாரம்பரியத்தை பரவலான இசுலாமியரிடம் எடுத்துச் சென்றார்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Nazrul: The ever-shining beacon". The Daily Star. 31 August 2013. http://archive.thedailystar.net/beta2/news/nazrul-the-ever-shining-beacon/. பார்த்த நாள்: 26 December 2013.
- ↑ Hossain, Quazi Motahar (2000). "Nazrul Islam, the Singer and Writer of Songs". In Mohammad Nurul Huda (ed.). Nazrul: An Evaluation. டாக்கா: Nazrul Institute. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 984-555-167-X.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|month=
and|coauthors=
(help)