பத்ஹுல்லா குலன்
பத்ஹுல்லா குலன் (பிறப்பு 27ஏப்ரல் 1941-) இசுலாமிய அறிஞர்,துருக்கிய மதபோதகர்,சிந்தனையாளர்,புகழ்பெற்ற எழுத்தாளர்,[4] கவிஞர் ஆவார்.இவர் குலன் இயக்கத்தின்(ஹிஸ்மத் என அறியப்படுகின்றது) ஸ்தாபகர் ஆவார்.இவர் தனது நாட்டைவிட்டு வெளியேறி,தற்போது அமெரிக்காவின் சைலஸ்பேர்க்,பென்சிலவேனியாவில் வசித்துவருகின்றார்.[5][6][7]
பத்ஹுல்லா குலன் | |
---|---|
பத்ஹுல்லா குலன், 1998 | |
பிறப்பு | 27 ஏப்ரல் 1941[1] பசின்லர், எர்துரும், துருக்கி |
காலம் | நவீன காலம் |
பள்ளி | ஹனபி[2] |
முக்கிய ஆர்வங்கள் | பராம்பரிய இஸ்லாமிய கல்வி, இஸ்லாமிய பழமைவாதம், கல்வி, வேதம் வழங்கப்பட்டவர்களுக்கிடையிலான மதநல்லிணக்க கலந்துரையாடல்கள், சூபிசம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | குலன் இயக்கம் |
செல்வாக்குச் செலுத்தியோர் |
குலன்,சுன்னி முஸ்லிம் அறிஞரான சைத் நுர்சியின் போதனைகளிலிருந்து பெறப்பட்ட போதனைகளை போதித்துவருகின்றார்.அவர் விஞ்ஞானம்,வேதம் வழங்கப்பட்டவர்களுக்கிடையிலான மதநல்லிணக்க கலந்துரையாடல்கள் மற்றும் பலகட்சி ஜனநாயகம்[8] என்பவற்றை நம்புவதாக குறிப்பிடுகின்றார்.அவர் இப்படிப்பட்ட கலாந்துரையாடல்களை வத்திக்கான்[9] மற்றும் சில யூத அமைப்புக்களோடு ஆரம்பித்துள்ளார்.[10]
துருக்கி அரசின் மற்றும் நவீன இஸ்லாமிய உலகத்தின் எதிர்காலத்தை கவனத்தில்கொண்டு,அவர் ஆவர்த்துடன் சமூக விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றார்.அவரை ஆங்கிலமொழி ஊடகங்கள், "இஸ்லாத்தின் சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதுடன் பொதுத்தன்மை,கடினஉழைப்பு மற்றும் கல்வியை வலியுறுத்தும் ஓர் இமாம்" என குறிப்பிடுகின்றன.[11] மேலும், அவர் உலகின் மிகமுக்கிய முஸ்லிம் ஆளுமைகளில் ஒருவராக நோக்கப்படுகின்றார்.[8]
வாழ்க்கை வரலாறு
தொகுகுலன் துருக்கியின் எர்துரும் நகருக்கு அருகிலுள்ள குருசுக் கிராமத்தில் பிறந்தார்.[12] அவரது தந்தை ராமிஸ் குலன் ஓர் இமாம்.கமால் அர்துக் அரசில் மதக்கற்பித்தல்களுக்கு தடைவிதிக்கப்படிருந்ததால், குலனின் தயார் அவரது கிராமத்தில் புனித அல்குர்ஆனை போதித்தார்.[13] குலன் தனது ஆரம்பக் கல்வியை தனது கிராமத்தில் பெற்றுக்கொண்டார்.எனினும் அவரது குடும்பம் இடம்பெயர்ந்த பின்னர் அவர் தொடரவில்லை.அவர் இஸ்லாமியக் கல்வியை சில எர்துரும் மதரசாக்களில் கற்றார்.[14] அவர் தனது முதலாவது சொற்பொழிவை 14வயதில் நகழ்த்தினார்.[15] குலன் சைத் நுர்சி மற்றும் ஜலாலுத்தீன் ரூமி ஆகியோரின் கருத்துக்களால் கவரப்பட்டார்.[16]
குலன் 1981இல் சம்பிரயாத ரீதியாக போதனைகள் செய்வதிலிருந்து ஓய்வுபெற்றார்.1988 முதல் 1991வரை அவர் துருக்கியின் பெரிய நகரங்களிலுள்ள பள்ளிவாசல்களில் சொற்பொழிவாற்றினார். ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள் மன்றத்தின் உருவாக்க கூட்டத்தில் பங்குகொண்ட குலனுக்கு[17],மன்றத்தின் கௌரவத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.[18] அவர் தன்சு சிலர் மற்றும் புலேன்ட் எஸேவிட் போன்ற அரசியல் தலைவர்களை சந்தித்தார்.எனினும், இசுலாமிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.குலன் 1999இல் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார்.
செயற்பாடுகள்
தொகுகுலன் இயக்கமானது நாடுகடந்த இஸ்லாமிய குடிமை சமூக அமைப்பாகும். குலனின் போதனையால் கவரவப்பட்டவர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர். அவரது ஹிஸ்மத்(பொதுநல சேவைகள்) பற்றிய கற்பித்தல்கள் பெரிய எண்ணிக்கையிலான ஆதரவாளர்களை துருக்கி, மத்திய ஆசியா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் கவர்ந்துள்ளது.[19]
சமகால பிரச்சினைகள் தொடரப்பிலான நோக்கு
தொகுபயங்கரவாதம்
தொகுபயங்கரவாதச் செயற்பாடுகள் இஸ்லாத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட முடியாது. ஒரு பயங்கரவாதி முஸ்லிமாக இருக்க முடியாது. ஒரு முஸ்லிம் பயங்கரவாதியாக இருக்க முடியாது.ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை பிதிநிதிப்படுத்தும் சமாதானம்,நலன்புரி மற்றும் சுபீட்சம் போன்ற அடையாளங்களையே கொண்டிருக்க முடியும்.[20][21] Gülen lamented the "hijacking of Islam" by terrorists.[10]
பெண்னுரிமை
தொகுஇஸ்லாம் பெண்களுக்கான உரிமைகளை வழங்கியுள்ளது.இஸ்லாத்தின் ஆரம்பகால பெண்களை வீடுகளில் முடங்கிக்கொண்டிருக்குமாறு அவர்களை எதிர்க்கவோ, மட்டுப்படுத்தப்படவோ இல்லை.[22]
மதசார்பின்மை
தொகுகுலன் துருக்கியின் மதசார்பின்மையை விமர்சிக்கின்றார்.மதசார்பின்மை என்பது மதங்களுக்கு எதிராகஇருக்கூடாது என்பதுடன்,மதம் மற்றும் நம்பிக்கைகளுக்கான சுதந்திரத்தையும் வழங்கவேண்டும் எனக் கூறுகின்றார்.[23]
சிரியப் புரட்சி
தொகுசிரியப் புரட்சயில் துருக்கி தொடர்புபடுவதை குலம் கடுமையாக எதிர்க்கின்றார்.[24] சிரிய ஜனாதிபதி பசர் அல்-அஸாத்தின் ஆட்சி கவிழ்கப்படுவதற்கான துருக்கி அரசின் விருப்பத்தை நிராகரிக்கும் அதேவேளை,ஐஸ்ஜஸ் க்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குகின்றார்.[25][26]
வெளியீடுகள்
தொகுகுலன் 40க்கு மேற்பட்ட புத்தகங்களையும்,நுர்ற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.சமயம் மற்றும் சமூகம் சார்ந்த பல உரைகளை அவர் ஆற்றியுள்ளார்.அவர் எழுதிய இந்தப் புத்தகங்கள் துருக்கியில் அதிகளவான விற்பனைகளை பதிவுசெய்துள்ளன. அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்:[27]
- Prophet Muhammad as Commander
- Key Concepts in the Practice of Sufism
- Towards the Lost Paradise
- Essentials of the Islamic Faith
- Pearls of Wisdom
மேற்கோள்கள்
தொகு- ↑ Robert A. Hunt, Yuksel A. Aslandogan, Muslim Citizens of the Globalized World: Contributions of the Gulen Movement, p 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1597840734
- ↑ Erol Nazim Gulay, The Theological thought of Fethullah Gulen: Reconciling Science and Islam (St. Antony's College Oxford University May 2007). p. 57
- ↑ 3.0 3.1 Erol Nazim Gulay (May 2007). "The Theological thought of Fethullah Gulen: Reconciling Science and Islam" (PDF). St. Antony's College Oxford University. p. 56.
- ↑ "Fethullah Gülen's Official Web Site - Gülen's Works". En.fgulen.com. Archived from the original on 2014-09-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- ↑ http://www.poconorecord.com/photogallery/PR/20100416/PHOTOS1013/416009999/PH/1
- ↑ http://www.latimes.com/world/la-fg-turkey-gulen-20140120-story.html
- ↑ http://www.businessinsider.com/fethullah-gulens-pennsylvania-home-2013-12
- ↑ 8.0 8.1 "How far they have travelled". The Economist. 6 March 2008. http://www.economist.com/node/10808408?story_id=10808408. பார்த்த நாள்: 2 May 2012.
- ↑ Helen Rose Fuchs Ebaugh, The Gülen Movement: A Sociological Analysis of a Civic Movement Rooted in Moderate Islam, p 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1402098944
- ↑ 10.0 10.1 Fethullah Gulen (Author) (2010-03-16). "Toward a Global Civilization of Love and Tolerance". Amazon.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
{{cite web}}
:|author=
has generic name (help) - ↑ http://www.bbc.co.uk/news/world-13503361
- ↑ M. Hakan Yavuz, John L. Esposito, Turkish Islam and the Secular State: The Gülen Movement, p. 20
- ↑ Helen Rose Fuchs Ebaugh, The Gülen Movement: A Sociological Analysis of a Civic Movement Rooted in Moderate Islam, p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1402098944
- ↑ "Gulen-Years of Education". http://fgulen.com/en. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); External link in
(help)|publisher=
- ↑ "Who is Fethullah Gülen? - Early Life". hizmetmovement.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
- ↑ "The Gulen Movement: Communicating Modernization, Tolerance, and Dialogue in the Islamic World". The International Journal of the Humanities. Ijh.cgpublisher.com. pp. 67–78. Archived from the original on 2016-11-07. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- ↑ "The Journalists and Writers Foundation". Archived from the original on 2015-11-17. பார்க்கப்பட்ட நாள் 2016-01-09.
- ↑ "About the Journalists and Writers Foundation". Archived from the original on 2014-09-14. பார்க்கப்பட்ட நாள் 2016-01-09.
- ↑ In Lester Kurtz's (of University of Texas, Austin) words, "One of the most striking operationalizations of Gulen's fusion of commitment and tolerance is the nature of the Gulen movement, as it is often called, which has established hundreds of schools in many countries as a consequence of his belief in the importance of knowledge, and example in the building of a better world. The schools are a form of service to humanity designed to promote learning in a broader sense and to avoid explicit Islamic propaganda." Kurtz also cites in the same work the comments of Thomas Michel, General Secretary of the Vatican Secretariat for Inter-religious Dialogue, after a visit to a school in Mindanao, Philippines, where the local people suffered from a civil war, as follows: "In a region where kidnapping is a frequent occurrence, along with guerrilla warfare, summary raids, arrests, disappearances and killings by military and para-military forces, the school is offering Muslim and Christian Filipino children, along with an educational standard of high quality, a more positive way of living and relating to each other." Kurtz adds: "The purpose of the schools movement, therefore, is to lay the foundations for a more humane, tolerant citizenry of the world where people are expected to cultivate their own faith perspectives and also promote the well being of others... It is significant to note that the movement has been so successful in offering high quality education in its schools, which recruit the children of elites and government officials, that it is beginning to lay the groundwork for high-level allies, especially in Central Asia, where they have focused much of their effort." See, Lester R. Kurtz, "Gulen's Paradox: Combining Commitment and Tolerance," Muslim World, Vol. 95, July 2005; 379–381.
- ↑ "Importance of Gulen Movement in the Post 9/11 Era: Co-existenceFethullah Gulen". Fethullah Gulen. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- ↑ "A Real Muslim cannot be a Terrorist". Fethullah Gulen. 2004-03-23. Archived from the original on 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
- ↑ "Fethullah Gülen's Official Web Site - Women Confined and Mistreated". En.fgulen.com. 2008-05-08. Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- ↑ skyron.co.uk. "European Muslims, Civility and Public Life Perspectives On and From the Gülen Movement". Continuumbooks.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- ↑ "Turkey and Syria: An explosive border". Economist.com. 2013-05-18. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- ↑ "Gülen warns against Turkey’s unilateral war". TODAY'S ZAMAN. 7 October 2014 இம் மூலத்தில் இருந்து 21 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141221050301/http://www.todayszaman.com/national_gulen-warns-against-turkeys-unilateral-war_360947.html. பார்த்த நாள்: 21 December 2014.
- ↑ Halil Karaveli (12 November 2012). "Erdogan Pays for His Foreign Policy". The National Interest. பார்க்கப்பட்ட நாள் 21 December 2014.
- ↑ Foundation, M.F.Gulen: Essays,Perspectives,Opinions (The Light,Inc. 2002). p. 08