பந்தளம் மகாதேவர் கோயில்
பந்தளம் மகாதேவர் கோயில், இந்தியாவின் கேரளாவில் தோட்டக்கோணம் மற்றும் முளம்புழா கிராமங்களுக்கு இடையே உள்ள பந்தளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. வருடாவருடம் நடத்தப்படும் கெத்துக்கல்ச்சா திருவிழா சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்ற விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சிவபெருமானுக்கு 10 நாட்கள் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் துவங்குகின்ற இந்த விழாவானது ஆறாட்டுடன் முடிவடைகிறது. இக்கோயிலின் நிர்வாகம் மகாதேவ சேவா சமிதியின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். இக்கோயிலில் கருவறையில் உள்ள மூலவர் சிலை பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது.
கார முனியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 மிகவும் பழமையான கோவில்களில் சிவன் கோவில்களில் பந்தளம் மகாதேவர் கோயில் ஒன்றாகும். இக்கோயில் அச்சன்கோயில் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. ஆதலால் இக்கோயில் எனவே இந்த கோயில் முக்கல் வட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. ஐயப்பன் உறையும் இடம் என்ற வகையில் பந்தளம் உலகப் புகழ் பெற்றதாகும்.
கருவறையைச் சுற்றி இயற்கையாகவே அமைந்துள்ள பாதையானது தனிச்சிறப்பு வாய்ந்தது. சிவனின் 'ஜடா' (முடி)யிலிருந்து கங்கை பாய்வது போல, மகாதேவர் சன்னதியின் பாதங்களைத் தொட்டு நதி ஓடுகிறது. இங்கு விநாயகர், 'மாயா-யட்சி அம்மா', ஐயப்பன், நாகர் (பாம்பு), சுப்பிரமணியர், பிரம்ம ரட்சர்கள் உள்ளிட்டோரின் சிலைகள் இங்கு வழிபாட்டில் உள்ளன.[1] அந்த வகையில் இக்கோயிலானது கைலாசத்தின் அடையாளமாகவும், மாதிரியாகவும் அமைந்த பெருமையைப் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mathew, Biju (2013). Pilgrimage to Temple Heritage, Volume 1. Info Kerala Communications Pvt Ltd. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8192128443.