பந்திப்பூர்

பந்திப்பூர் (தேவநாகரி बन्दीपुर) என்பது ஒரு மலையடிவார குடியேற்றம் மற்றும் நேபாளத்தின் தனஹூ மாவட்டத்தின் ( கந்தகி மண்டலம்) ஒரு நகராட்சி ஆகும். இந்த நகராட்சி 2014 ஆம் ஆண்டு மே 18 அன் நிறுவப்பட்டது.[1][2] பாதுகாக்கப்பட்ட, பழைமை வாய்ந்த கலாச்சார சூழல் காரணமாக பந்திப்பூர் சுற்றுலாத் துறையில் முன்னேறி வருகின்றது. 2011 ஆம் ஆண்டின் நேபாள மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது பந்திப்பூர் மற்றும் தரம்பனியில் 3750 தனிநபர் வீடுகளில் 15,591 பேர் வசித்து வந்தனர்.[3] இது நேபாளத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். நெவாரி மக்களுக்கும் அவர்களின் கலாச்சாரங்களுக்கும் பந்திப்பூர் பிரபலமானது.

அமைவிடம்தொகு

பந்திப்பேர் 27.56 வடக்கு, 84.25 கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில், 1030 மீற்றர் உயரத்தில், மார்சியங்டி நதி பள்ளத்தாக்கில் இருந்து சுமார் 700 மீ உயரத்திலும், காத்மாண்டுவுக்கு மேற்கே 143 கிமீ தொலைவிலும், போகாராவின் கிழக்கே 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நகராட்சிதொகு

2014 ஆம் ஆண்டு மே 8 அன்று பிரதமர் அலுவலகத்தில் சிங்கா தர்பாரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் உள்ளாட்சி சுயராஜ்யச் சட்டம் 1999 க்கு இணங்க முன்னர் முன்மொழியப்பட்ட 37 நகராட்சிகள் உட்பட கூடுதலாக 72 நகராட்சிகளை அறிவித்தது. இந்த அறிவிப்புடன் பந்திப்பூர் நேபாள நகராட்சியாக முன்மொழியப்பட்டது. அருகிலுள்ள தரம்பனி வி.டி.சி நகராட்சி பந்திப்பூருடன் இணைக்கப்பட்டது. 2014 ஆம் சூன் 2 முதல் பந்திப்பூர் கிராமக் குழுவின் தொடக்கத் திட்டத்துடன் முறையாக பந்திப்பூர் நகராட்சியாக செயற்படத் தொடங்கியது.

சமூக நிறுவனங்கள்தொகு

சமூக இளைஞர் மன்றம், பொது நூலகம், சிறுவர் கழகம் போன்ற சமூக அமைப்புகள் பந்திப்பூரில் காணப்படுகின்றது. பத்மா நூலகம் நேபாளத்தின் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றாகும் இது ராணாவின் ஆட்சியில் நிறுவப்பட்டது. பந்திப்பூரில் ஏராளமான சமூக அமைப்புகள் தோன்றி மங்கிவிட்டன. திந்தாரா இளைஞர் கலாச்சாரக் குழு (டி.ஒய்.சி-குழு) 1998 இல் நிறுவப்பட்ட செயலில் உள்ள ஒரே இளைஞர் கழகம் (சமூக இளைஞர் மன்றம்) ஆகும். ஆரம்பத்தில் இது ஒரு தளர்வான மன்றமாக இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாக அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

சூழல் கலாச்சார திட்டம்தொகு

பந்திப்பூர் சுற்றுச்சூழல் கலாச்சார சுற்றுலாத் திட்டம் (BECT-Project) என்பது நேபாளத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பந்திப்பூரை உயர்த்தும் திட்டமாகும். BECT- திட்டத்திற்கு ஐரோப்பா ஏயிட் உதவி வழங்க முன்வந்தது. அதன் நோக்கங்கள் இந்த நகரை ஒரு தனித்துவமான சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதும் ஊக்குவிப்பதும் ஆகும். பந்திப்பூரின் கட்டப்பட்ட மற்றும் இயற்கை சூழலை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், பொருளாதார நடவடிக்கைகளை புத்துயிர் பெற உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல், பந்திப்பூரின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தல் என்பன திட்டத்தில் அடங்கும்.

இனக் குழுக்கள்தொகு

முன்னர் ஒரு மாகர் கிராமமாக இருந்த பந்திப்பூர் இன்று பல்வேறு நேபாள இனங்களால் குடியேறப்பட்டுள்ளது. பஹுன்கள் , சேத்ரிஸ் , நெவார்ஸ் , டாமாய்ஸ் , காமிஸ் , சார்கிஸ் , கசாய்ஸ், மாகர்கள் மற்றும் குருங்ஸ் ஆகிய இனங்களை சேர்ந்த மக்கள் இங்கு வாழ்கின்றார்கள். பல்வேறு நெவாரி மற்றும் மாகர் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றது. சோரதி மற்றும் சுட்கா நடனங்கள் மிகவும் பிரபலமானவை. பல மாகர் மற்றும் குருங் ஆண்கள் கூர்க்கா வீரர்களாக பணியாற்றுகிறார்கள்.

சான்றுகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்திப்பூர்&oldid=2868177" இருந்து மீள்விக்கப்பட்டது