பந்து விளையாட்டுகள்
பந்தை வைத்து விளையாடப்படும் விளையாட்டுகள்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பந்து விளையாட்டுகள் என்பவை விளையாட்டின் ஒரு பகுதியாக பந்தை கொண்டு விளையாடும் விளையாட்டு ஆகும். இவற்றில் குழுவாக விளையாடும் கால்பந்து ,அடிப்பந்து, கூடைப்பந்து, அமெரிக்க கால்பந்து போன்ற விளையாட்டுகள் அடங்கும். இத்தகைய விளையாட்டுகள் பலவிதமான விதிகளையும் வரலாறுகளையும் கொண்டுள்ளன, மேலும் பெரும்பாலும் தொடர்பற்ற தோற்றம் கொண்டவை. பந்து விளையாட்டுகள் பல வகைகளில் அமைகின்றன:
- மட்டைப்பந்து, பந்தை கொண்டு விளையாடும் அடிப்பந்து, துடுப்பாட்டம்.
- ராக்கெட் மற்றும் பந்தை கொண்டு விளையாடும் டென்னிஸ், சுவர்ப்பந்து ப்பூப்பந்தாட்டம் அல்லது இறகுப்பந்தாட்டம்.
- கை மற்றும் பந்தை கொண்டு விளையாடும் பல்வேறு கைப்பந்து ஆட்டங்கள், நான்கு சதுர விளையாட்டுக்கள்.
- பந்தை கொண்டு குழுவாக விளையாடும் விளையாட்டுக்களான கூடைப்பந்து, கால்பந்து, லாக்ரோஸ், வளைத்தடிப் பந்தாட்டம் (ஐஸ் ஹாக்கி).
- வலை கொண்டு விளையாடும் கைப்பந்து மற்றும் கால் கட்டைப் பந்து .
- குவார்டெட்,கோல்ஃப்,ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் போன்ற இலக்கு விளையாட்டு அல்லது துல்லியமான பந்து விளையாட்டுகள்.