பனச்சிக்காடு கோயில்

கேரளத்தின் கோட்டயம் மாவட்டதில் உள்ள கோயில்

பனச்சிக்காடு கோயில் (Panachikkadu Temple) என்பது இந்தியாவில் கேரளத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சரசுவதி கோயில் ஆகும். இக்கோயில் கோட்டயம் நகருக்கு 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தடசிண மூகாம்பிகை கோயில் என்றும் அழைக்கபடுகிறது. மகாவிஷ்ணு இத்தலத்தின் பிரதான தெய்வமாக உள்ளார். என்றாலும் இக்கோயில் சரஸ்வதியின் கோவில் என்றே கேரளத்தில் சிறப்பாக அறியப்படுகிறது. இந்தக் கோவிலிலே பிள்ளையார், சிவன், சாஸ்தா, யக்ஷி ஆகிய மற்ற தெய்வங்களும் உள்ளனர். அக்கோயிலில் அக்டோபர்- நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடக்கும் சரசுவதி பூசை மிகப் புகழ்பெற்றது. அப்போது நடக்கும் வித்யாரம்பம் சடங்கில் குழந்தைகளுக்கு எழுத்தறவு கற்பிப்பது துவக்கப்படுகிறது.[1]

பனச்சிக்காடு கோவில்

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனச்சிக்காடு_கோயில்&oldid=3826576" இலிருந்து மீள்விக்கப்பட்டது