பனப்பாக்கம் மயூரநாதர் கோயில்
பனப்பாக்கம் மயூரநாதர் கோயில் என்ற கோயில் இந்தியாவின், தமிழ்நாட்டில், வேலூர் மாவட்டத்தில் பனப்பாக்கம் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலாகும்.[1]
தலவரலாறு
தொகுஒரு சமயம் சிவன் கயிலாயத்தில் உள்ள உத்தியான வனத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் தியானத்தில் இருக்கும் போது உமாதேவியும் நந்திதேவரும் அவ்விடத்தை விட்டு அவ்வனத்தின் பேரெழிலையும் கண்டனர். உமாதேவி அங்கு மயில் தோகை விரித்து ஆடுவதையும், நந்தித்தேவர் அங்கு புலியின் விளையாட்டையும் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். சிவபெருமான் தியானத்திலிருந்து நீங்கி அங்கு உமாதேவியும் நந்திதேவரும் காணாததால் கயிலாயம் சென்றார். உமாதேவியும் நந்திதேவரும் திரும்பி வந்து பார்க்க சிவபெருமான் அங்கு இல்லாமையால் அவர்களும் கயிலாயம் போர்ந்தனர். அங்கு சிவபெருமான் நீங்கள் இருவரும் என்னை மறந்து மயில் ஆட்டத்தையும், புலி விளையாட்டையும் பார்த்துக்கொண்டிருந்ததால் புவியில் மயிலாகவும், புலியாகவும் மாறுக என சபித்தார். இவ்விருவரும் சாபம் நீங்க வழியாதென வினவ பூவுலகில் தொண்டைநாட்டில் முக மண்டலம் போன்ற காஞ்சிக்கு ஒரு காத தொலைவில் பனசையம் பதியில் நம் திருவுருவமாக உள்ள சோதிவடிவாக உள்ள பெருமானை பூசிக்க இச்சாபம் விலகும் என்றார். இவ்விருவரும் இத்தலத்திற்கு வந்து பூசை செய்து வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றனர்.
கோயில் கல்வெட்டுகள்
தொகுபனப்பாக்கம் மயூரநாதர் கோயிலில் சுமார் 1000 ஆண்டுக்கு முற்பட்ட[2] இராச இராச சோழனின் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் கல்வெட்டு சவுந்தர நாயகி சந்நிதி அர்த்த மண்டபத்தின் வடக்குபுற சுவற்றில் உள்ளது. மயூரநாதர் கருவறையின் வடக்குச் சுவற்றில் விஜயநகரப் பேரரசு வெங்கடபதி ராயன் கல்வெட்டும் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில்". அறிமுகம். தினமலர். பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2017.
- ↑ பனப்பாக்கத்தில் 1,000 ஆண்டு பழமையான மயூரநாதர் கோயில்