இரண்டாம் வெங்கடன் அல்லது வெங்கடபதி ராயன், (கி.பி. 1586-1614) விஜயநகர அரசை ஆண்ட அரவிடு மரபின் மூன்றாவது அரசனாவான். ஸ்ரீரங்க தேவ ராயனுடைய கடைசித் தம்பியான இவன் ஆண்ட 30 ஆண்டுகளிலும், அரசின் வலு ஓரளவுக்கு மீட்கப்பட்டது. பீஜப்பூர், கோல்கொண்டா ஆகியவற்றின் சுல்தான்களை வெற்றிகரமாகச் சமாளித்து வந்தான். உள்நாட்டுக் குழப்பங்களையும் அடக்கிப் பொருளாதார மீட்சியையும் ஓரளவுக்கு ஏற்படுத்தினான். கிளர்ச்சி செய்த தமிழ் நாடு மற்றும் ஆந்திரத்தின் சில பகுதிகளைச் சேர்ந்த நாயக்கர்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.[1]