பனாகொடை இராணுவ முகாம்

பனாகொடை இராணுவ முகாம் அல்லது பனாகொடை இராணுவத் தளம் (Panagoda Cantonment) என்பது இலங்கையின், மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் இராணுவத் தளம் ஆகும். இது இலங்கைத் தரைப்படையின் பல படையணிகளின் தலைமையகமாகவும், ஆயுதக் களஞ்சியமாகவும் உள்ளது. இங்கு இலங்கை இராணுவ மருத்துவப் படையினால் நடத்தப்படும் பிரதான இராணுவ மருத்துவமனை இயங்குகிறது. இது இலங்கையின் மிகப்பெரிய இராணுவத் தளங்களில் ஒன்றாகும்.

பனாகொடை இராணுவ முகாம்
பனாகொடை, மேல் மாகாணம்
வகை படைத்தளம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கைத் தரைப்படை
இட வரலாறு
கட்டிய காலம் 1952 - 1959
பயன்பாட்டுக்
காலம்
1953 – தற்போது
காவற்படைத் தகவல்
காவற்படை இலங்கை பீரங்கிப் படையணி,
இலங்கை சமிக்ஞை படையணி,
இலங்கை இலகு காலாட்படை

வரலாறு

தொகு

வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முதலாவது நிரந்தரச் செயலாளரான சேர் கந்தையா வைத்தியநாதன் 1949 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தை உருவாக்கி பனாகொடையில் ஒரு பாசறையை அமைப்பதற்கான முடிவை எடுத்தார். இதற்காக 1950 ஆம் ஆண்டில், 350 ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் வாங்கப்பட்டது. 1952, அக்டோபர் 10 இல் கட்டுமானம் தொடங்கி 1959 இல் நிறைவடைந்தது. பிரதமர் விஜேயானந்த தகநாயக்கா 1959 திசம்பர் 22 அன்று பிரதான கட்டிடத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். அப்போதிருந்து இது ஒரு படைத்தொகுதி, மேற்கு கட்டளை, ஆதரவு படை கட்டளை மற்றும் தலைமையகமாகவும், முதலாம் பிரிவின் தலைமையகமாகவும் ஆக்கப்பட்டது. 1997 யூலை 15 அன்று, இது பதினோராம் பிரிவின் தலைமையகமாகவும் ஆக்கப்பட்டது. 2009 செப்டம்பர் 23 அன்று, பனாகொடை முகாமில் தெற்கு–பாதுகாப்புப் படைத் தலைமையகம் உருவாக்கப்பட்டது. 2012 நவம்பர் 15 அன்று பாதுகாப்பு படைகளின் தலைமையகம் – தெற்கு என்பது பாதுகாப்பு படைகளின் தலைமையகம்-மேற்கு என்று பெயர் மாற்றப்பட்டது.[1]

பனாகொடை முகாமில் தலைமையகத்தைக் கொண்ட படைப்பிரிவுகள்

தொகு
  • இலங்கை இலகு காலாட்படை
  • இலங்கை பீரங்கிப் படையணி
  • இலங்கை பொறியாளர்கள் படையணி
  • இலங்கை சமிக்ஞைகள் படையணி
  • பொறியாளர் சேவைகள் படையணி
  • இலங்கை இராணுவ சேவைப் படை
  • இலங்கை ஆயுதப்படை
  • இலங்கை இராணுவ மருத்துவப் படை
  • இலங்கை இராணுவ ஜெனரல் சர்வீஸ் கார்ப்ஸ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Cantonment at a Glance". army.lk. Sri Lanka Army.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனாகொடை_இராணுவ_முகாம்&oldid=3986329" இலிருந்து மீள்விக்கப்பட்டது