பனிக்குடப்பை

பனிக்குடப்பை (Amniotic sac) என்பது முளையம் அல்லது முதிர்கருவைச் சுற்றியிருக்கும், முளையத்திற்கு அல்லது முளைய விருத்தியின் பிந்திய நிலையில் முதிர்கருவிற்கு பாதுகாப்பையும், ஊட்டச்சத்தையும் வழங்குவதற்கான திரவத்தைக் கொண்டிருக்கும் ஒரு பை போன்ற அமைப்பாகும். இந்தப் பையானது இறுக்கமான, ஆனால் மெல்லிய, ஒளிபுகவிடும் தன்மை கொண்ட மென்சவ்வாலானது. குழந்தை பிறப்பிற்கு சில மணி நேரம் முன்னர்வரை இந்தப்பை காணப்படும். குழந்தை பிறக்க முன்னர் இந்த மென்சவ்வு கிழிந்து குழந்தை வெளிவர உதவும். உள்ளான மென்சவ்வு ஆம்னியோன் எனப்படும். இது தன்னுள்ளே பனிக்குட நீரையும், முளையம் அல்லது முதிர்கருவையும் கொண்டிருக்கும். கோரியோன் எனப்படும் வெளிச்சவ்வு நஞ்சுக்கொடி யையும் பனிக்குட நீரையும் கொண்டிருக்கும்.

Amniotic sac
A drawing of the amniotic sac from Gray's Anatomy.
The amniotic sac opened during afterbirth examination.
உடற்கூற்றியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிக்குடப்பை&oldid=2226988" இலிருந்து மீள்விக்கப்பட்டது