பனிச்சறுக்கு ஊர்தி

பனியின் மீது சறுக்க பயன்படும் வாகனம்
(பனிச்சறுக்கு வண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உறைபனி காடாய்ப் பரந்து கிடக்கும் இடங்களில், பொருளையும் மக்களையும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு பனியில் நகர்த்திச் செல்ல ஆழிகள் (சக்கரங்கள்) இல்லாத சறுக்குக் கட்டைகள் பொருத்திய "வண்டி"களுக்கு பனிச்சறுக்கு ஊர்தி அல்லது பனியிசுனி என்று பெயர். இது மனிதர்களோ, குதிரைகளோ, நாய்களோ இழுத்துச் செல்லும்படியான ஊர்தியாகும் (வண்டியாகும்).

ஒரு பனித்தளத்தில் குதிரை ஒன்று பனிச்சறுக்கு ஊர்தியை இழுத்துச் செல்வது. இதனைத் தமிழில் பனியிசுனி, இசுலெட் (sled), இசுலை (sleigh) என்றும் கூறலாம். (தமிழில் இசு என்றால் இழு. இசும்பு என்றால் வழுக்குநிலம்)

பனிச்சறுக்கு வண்டியை இசுலெட் (sled) அல்லது இசுலை (sleigh) என்றும் ஆங்கில மொழிவழிக் கூறலாம். தமிழில் இசு என்றால் இழு என்னும் வினையைக் குறிப்பதில் இருந்தும், இசும்பு என்றால் வழுக்குநிலம்[1] என்னும் வழக்கு பற்றியும் தமிழ்வழிப் பொருளாகவும் இசுலை என்பதைக் கொள்ளலாம். ஆனால் இசுலை என்பது sleigh என்னும் ஆங்கிலசொல்லைத் தமிழில் எழுதுவதின் வடிவம். Sleigh என்னும் ஆங்கிலச்சொல்லானது டச்சு மொழிச்சொல்லாகிய slee என்பதில் இருந்து எடுத்துக்கொண்டு, 1703 ஆண்டுமுதல் வழங்கி வருகின்றது[2]. பனியில் இசுக்கும் (இழுக்கும்) பொழுது அதிக உராய்வு ஏற்படாமல் இருக்க அகலம் குறைந்த கட்டைகளோ, கம்பிகளோ ஊர்தியின் அடியே இருக்கும் (படத்தைப் பார்க்கவும்).

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. கழகத் தமிழ் அகராதி
  2. ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிச்சறுக்கு_ஊர்தி&oldid=3370539" இலிருந்து மீள்விக்கப்பட்டது