பனிச்சிறுத்தை (நூல்)

பனிச்சிறுத்தை (The Snow Leopard) 1978 ஆம் ஆண்டு பீட்டர் மாத்திசென் என்னும் எழுத்தாளரால் எழுதப்பட்ட புத்தகம் ஆகும். இப்புத்தகமானது பீட்டர் மாத்திசென் மற்றும் ஜார்ஜ் சாலர் என்னும் இயற்கை ஆர்வலர்ருடன் சேர்ந்து இமயமலையின் திபெத்திய பீடபூமியில் உள்ள டோல்போ பகுதியில் இரண்டு மாதங்களாக ஈடுபட்ட பனிச்சிறுத்தை தேடுதல் பற்றிய தகவல்களைக் கொண்டது.

பனிச்சிறுத்தை
முதல் பதிப்பு
நூலாசிரியர்பீட்டர் மாத்திசென்
நாடுநேபாளம்
மொழிஆங்கிலம்
வகைஇயற்கை வரலாறு, பயண இலக்கியம்
வெளியீட்டாளர்வைக்கிங் பிரஸ்
வெளியிடப்பட்ட நாள்
1978
ஊடக வகைஅச்சுப்பதிப்பு, மின் பதிப்பு
பக்கங்கள்338 pp (hardcover)
ISBN0-670-65374-8
915.49/6

உள்ளடக்கம் தொகு

இந்தப்புத்தகம் 1973 ஆம் ஆண்டு மாத்திசென் மற்றும் சாலர் நேபாளத்தின் டோல்போ பகுதியில் உள்ள சே கோம்பா பகுதிக்கு மேற்கொண்ட பயணத்தின் தகவல்களை உள்ளடக்கியது ஆகும். இப்பயணத்தின் காரணங்கள் இருவருக்கும் வெவ்வேறு ஆகும். இப்பயணத்திற்கு சாலரின் முக்கியமான காரணம் இமாலய நீல செம்மறி ஆட்டின் இனச்சேர்க்கையை பற்றி அறிவதும் அதனை அமெரிக்க செம்மறி ஆட்டின் இனச்சேர்க்கை பழக்கத்துடன் ஒப்பிட்டு பார்ப்பதும் ஆகும். இப்பயணத்திற்கு மாத்திசென்னின் முக்கிய காரணம் ஆன்மீக ஆய்வு ஆகும். இந்த பயணத்திற்கு மேலும் ஒரு காரணம் என்னவென்றால் பனிச்சிறுத்தையைக் காண்பது. அது அந்த பகுதியில் காணுதற்கரிய மாமிசம் உண்ணும் பிராணி ஆகும் (இது முந்தைய இருபத்தைந்து வருடங்களில் இருமுறை மட்டுமே மேற்கத்திய நாட்டினரால் காணப்பட்டது). இந்தப் பயணத்திற்கான மூன்றாவது காரணம் அப்பகுதியில் உள்ள புத்த மடத்தையும் அதன் லாமாவையும் சந்திப்பது ஆகும்.[1]

இந்த புத்தகத்தின் பயணம் சார்ந்த கருத்துகள் புகழ் பெற்ற சர் ரிச்சர்ட் பர்ட்டன்‌, சர் ஹென்றி மோர்டன் ஸ்டான்லி, மற்றும் சர் எர்னஸ்ட் ஹென்றி ஷாக்கில்டன் அவர்களின் பாணியில் அமைந்துள்ளது. இதன் இயற்கை சார்ந்த கருத்துகள் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் மற்றும் சார்லஸ் டார்வின் அவர்களின் படைப்புகளை நினைவூட்டும்படி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் உள்ள தியானம், உள் அமைதி, இடங்களின் ஆய்வு ஆகியவை பாஷோ, வேர்ட்ஸ்வொர்த், தோரியோ ஆகியோர்களின் படைப்புகளை போன்று உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்புத்தகத்தில் மாத்திசென் அடிக்கடி தன் மனைவி தெபோரா பற்றி நினைவுகூர்ந்து தன் சோகத்தை வெளிபடுத்தி உள்ளார். அவர் மாத்திசென் பயணம் மேற்கொள்வதற்கு சிறிது காலம் முன்னர் தான் புற்று நோயினால் மரணம் அடைந்தார்.[2] எனவே இப்புத்தகம் மரணம், பாதிப்பு, இழப்பு, நினைவுகள், குணப்படுத்துவது ஆகியவை பற்றிய தியானம் போன்று உள்ளதாக கருதப்படுகிறது. தெபோரா பற்றிய நினைவுகளும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளதால் இது மற்ற பயண புத்தகம் போல தேதி,பயண பாதை போன்ற தகவல்கள் மட்டுமின்றி வேறுபட்டு உள்ளது. இருப்பவை இல்லாதவை பற்றிய கேள்விகள் மாறி மாறி இப்புத்தகத்தில் கேட்கப்பட்டு நிலையான அமைதி என்பது உலகில் நடப்பவற்றை ஏற்றுக்கொள்வதனாலே அன்றி இல்லாதது மற்றும், நடக்காததை எண்ணி ஏங்குவதால் அல்ல என்று கூறப்படுகிறது.

விருதுகள் தொகு

பனிச்சிறுத்தை புத்தகம் 1979 ஆம் ஆண்டு சிறந்த சமகாலத்திய சிந்தனையுடைய நூல் எனும் பிரிவில் அமெரிக்காவில் வழங்கப்படும் தேசிய புத்தக விருதினை வென்றது. 1980ஆம் ஆண்டு அமெரிக்காவில் வழங்கப்பட்ட சிறந்த புனைவற்ற நூலுக்கான தேசிய விருதினையும் இந்தப் புத்தகம் வென்றது. அது முதல் இப்புத்தகம் பல்வேறு பாராட்டுகளை பெறத் தொடங்கியது. இந்தப் புத்தகம் உலகின் தலைசிறந்த பயண நூல்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது. வேர்ல்ட் ஹம் இன் சிறந்த முதல் பத்து பயண நூல்களின் பட்டியலில் இந்தப் புத்தகமும் ஒன்று. நேஷனல் ஜியாகிரபிக் டிரேவலர் வெளியிட்ட 80+ புத்தகங்களில் உலகத்தை சுற்றி வரலாம் என்ற பட்டியலிலும் இந்த புத்தகம் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Blanton, Casey. Travel Writing. Routledge. பக். 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1136745653. https://books.google.com/books?id=Gf2AAAAAQBAJ&pg=PT94. பார்த்த நாள்: 21 June 2014. 
  2. "The Snow Leopard". University of Tennessee at Martin. பார்க்கப்பட்ட நாள் 21 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிச்சிறுத்தை_(நூல்)&oldid=3457912" இலிருந்து மீள்விக்கப்பட்டது