பனியர் என்ற பழங்குடியினர் இந்தியாவில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் பாணாசுரம் என்னும் மலைப் பகுதியிலும் , திண்டுக்கல் மேற்கு மலையிலும், ராமநாதபுரம் , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலும் வாழ்கின்றனர். இவர்கள் முருகனின் மனைவி வள்ளியின் வம்சம் என்றும் பளிச்சியம்மன் என்ற தெய்வத்தின் மரபினர் என்றும் ஒரு வாய்மொழி மரபு உண்டு. இவர்கள் தமிழும், கன்னடமும் கலந்த மொழியைப் பேசுகின்றனர். இடுப்பில் பட்டை அணிந்து இருப்பது இவர்களுடைய அடையாளம். பழங்குடி மக்களிலேயே படிப்பறிவு அற்றவர்களாக உள்ளார்கள். [1]

உசாத்துணை

தொகு
  • மனோரமா இயர் புக் 2005
  1. குழந்தைகள் கல்விக்கு உதவிக்கரம் நீட்டும் தலைமை ஆசிரியை தி இந்து தமிழ் அக்டோபர் 7 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனியர்&oldid=2126653" இலிருந்து மீள்விக்கப்பட்டது