பனி சறுக்கு நடனம்

பனிச்சறுக்கு நடனம் (Ice Dance) என்பது பனிச்சறுக்கின் மற்றொரு வடிவமாகும். இது வரலாற்று ரீதியாக வழவழப்பான தரையிலாடும் நடனத்திலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1952 ஆம் ஆண்டில் உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் சேர்க்கப்பட்டது. மேலும் 1976 இல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டில் பதக்க விளையாட்டாக மாறியது. சர்வதேச பனிச்சறுக்கு சங்க (ஐ.எஸ்.யூ) விதிகளின்படி, ஒரு பனி நடனக் குழு "ஒரு பெண் மற்றும் ஓர் ஆணை"க் கொண்டிருக்க வேண்டும்.[1]

எலீனா இலினிக் மற்றும் நிகிடா காட்சாலாபோவ் நிகழ்த்தும் நடனத்தின் போதான உயர்த்தல்.

2010–11க்கு முன்பு, பனிச்சறுக்கு நடனப் போட்டிகளில் மூன்று பிரிவுகள் இருந்தன. அவை: கட்டாய நடனம் (சிடி), அசல் நடனம் (OD) மற்றும் இயல்பான நடனம் (FD). 2010 ஆம் ஆண்டில், கட்டாய மற்றும் அசல் நடனத்தை நீக்கி, புதிய குறுகிய நடனம் (எஸ்டி) என்ற பிரிவை போட்டி அட்டவணையில் சேர்த்து போட்டி வடிவத்தை மாற்ற சர்வதேச பனிச்சறுக்கு சங்கம் (ஐ.எஸ்.யூ) வாக்களித்தது. 2018 ஆம் ஆண்டில், சர்வதேச பனிச்சறுக்கு சங்கம் (ஐ.எஸ்.யூ) குறுகிய நடனத்தை தாள நடனம் (ஆர்.டி) ஆக மறுபெயரிட வாக்களித்தது. பனி சறுக்கு நடன போட்டியின் போது பனி சறுக்கு நடனக் கலைஞர்கள் செய்ய வேண்டிய கட்டாய நடன அமைப்புகள் சில உள்ளன.

1900 களின் முற்பகுதியில், பனிச்சறுக்கு நடனம் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக இருந்தது. பிரித்தானிய பனிச்சறுக்கு நடன அணிகள் 1950 கள் மற்றும் 1960 களில் இவ்விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தின; பின்னர் 1990 கள் வரை சோவியத் அணிகளின் ஆதிக்கம் இருந்தது. 1980 கள் மற்றும் 1990 களில், ஐஸ் நடனக் கலைஞர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் பனி நடனத்தை அதன் ஆரம்ப காலத் தோற்றத்திலிருந்து நாடக நிகழ்ச்சி பாணிக்கு நகர்த்துவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டனர்.

சர்வதேச பனிச்சறுக்கு சங்கம் (ஐ.எஸ்.யூ) ஆண்டுதோறும் நடன மீறல்கள் மற்றும் அவற்றின் புள்ளிகளின் மதிப்புகளை வெளியிடுகிறது. பனி சறுக்கு நடனத்தில் வீழ்தல் மற்றும் குறுக்கீடுகள் மற்றும் நேரம், இசை மற்றும் ஆடைகளில் மீறல்கள் ஆகியவை அடங்கும்.

தாள நடனம்

தொகு
 
கேப்ரியெல்லா பாபடாகிஸ் மற்றும் குய்லூம் சிசெரோன், 2018

அனைத்து இளையோர் மற்றும் மூத்தோர் பனிச்சறுக்கு நடனப் போட்டிகளிலும் நிகழ்த்தப்படும் முதல் பிரிவு தாள நடனம் ஆகும். இது கட்டாய மற்றும் அசல் நடனத்தின் பல கூறுகளை ஒருங்கிணைக்கிறது. இதில் உள்ள ஒரு கட்டாய விதி என்னவென்றால் , இதில் பங்கேற்கும் ஒவ்வொரு நடனக் குழுவும் ஓர் "அமைப்பு நடனம்" தொகுப்பில் இரண்டு வடிவங்களை நடனத்தில் செய்ய வேண்டும். இதன் மூலம் குழுக்களிடையே நடனக் கலைஞர்களின் தொழில்நுட்ப திறன்களில் ஓர் ஒப்பீட்டை வழங்க முடிகிறது.[2][2][3][4]

தாள நடனத்தின் தாளங்கள் மற்றும் கருப்பொருள்கள் பனிப் பருவத்தின் தொடக்கத்திற்கு முன்னர் சர்வதேச பனிச்சறுக்கு சங்கத்தால் (ஐ.எஸ்.யு) தீர்மானிக்கப்படுகின்றன.[2][4][5][6]

சர்வதேச போட்டிகளில் முதல் தாள நடனத்தை, அமெரிக்க இளையோர் பனி நடனக் கலைஞர்களான அனசுதேசியா கன்னுசியோ மற்றும் கொலின் மெக்மனசு ஆகியோர் 2010 இளையோர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் நிகழ்த்தினர்.[7] இதுவரை நடந்த போட்டிகளிலேயே பிரெஞ்சு பனி நடனக் கலைஞர்களான கேப்ரியெல்லா பாபடாகிஸ் மற்றும் குய்லூம் சிசெரோன் ஆகியோர் 90.03 புள்ளிகளில் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர். இவர்கள் 5 முறை இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.[8]

இயல்பு நடனம்

தொகு

அனைத்து இளையோர் மற்றும் மூத்தோர் பனிச்சறுக்கு நடனப் போட்டிகளிலும் நிகழ்த்தப்படும் இரண்டாவது பிரிவு இயல்பு நடனம் ஆகும்.[9][9] இந்த நடனத்தில், தேவையான கூறுகள், போட்டியாளர்களின் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்கள் தேர்ந்தெடுத்த இசை இரண்டையும் வெளிப்படுத்தும் நடனக் கலைகள் இருக்க வேண்டும்.[9] இதில் நடனக்கலைஞர்கள் "சிறந்த சறுக்குதல் நுட்பம்" மற்றும் அதனை வெளிப்படுத்துதல், கருத்து மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைக் காட்ட வேண்டும்.[3] இயல்பு நடனக் கலை, இசையின் உச்சரிப்புகள், நுணுக்கங்கள் மற்றும் நடனத் தன்மையை பிரதிபலிக்க வேண்டும். மூத்த பனி சறுக்கு நடனக் கலைஞர்களுக்கு, இயல்பு நடனத்திற்குக்கு 4 நிமிடங்களும், இளையோர்களுக்கு, 3.5 நிமிடங்களும் கொடுக்கப்படும்.[3][10]

போட்டியின் கூறுகள்

தொகு

பனிச்சறுக்கு நடனத்தில் ஒவ்வொரு போட்டியின் போது பனிச்சறுக்கு நடனக் கலைஞர்கள் செய்ய வேண்டிய கூறுகள் உள்ளன. அவை மேலும் சீரான சறுக்கு நடனத் திட்டத்தை உருவாக்குகின்றன. சர்வதேச பனிச்சறுக்கு சங்கம் நடனத்தில் உயர்த்துதல் இயக்கத்தை வரையறுக்கிறது, இதில் ஒரு கூட்டாளர், செயலில் அல்லது செயலற்ற உதவியுடன் மற்ற கூட்டாளியை எந்தவொரு அனுமதிக்கப்பட்ட உயரத்திற்கும் உயர்த்தி அங்கேயே நிலைநிறுத்தப்பட்டு பனியின் மீது நடனத்தின் மூலம் அமைப்பை ஏற்படுத்துவார் ".[11] பனிச்சறுக்கு நடன உயர்த்துதல் இயகத்தின்போது எந்தவொரு சுழற்சி மற்றும் நிலை மாற்றங்களையும் சர்வதேச பனிச்சறுக்கு சங்கம் அனுமதிக்கிறது.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. S&P/ID 2018, p. 9
  2. 2.0 2.1 2.2 cite web |title=Partnered Ice Dancing Events |url=http://iceskatingresources.org/PartneredIceDancingEvents.html பரணிடப்பட்டது 2020-08-01 at the வந்தவழி இயந்திரம் |website=Ice Skating Information & Resources |publisher=San Diego Figure Skating Communications |accessdate=18 October 2019
  3. 3.0 3.1 3.2 cite web |title=Dance Format 2011 |url=http://files.kkhavirov.cz/200000806-409b941952/Short%20Dance%20Format%20Explanation.pdf பரணிடப்பட்டது 2020-10-22 at the வந்தவழி இயந்திரம் |publisher=Kraso Club of Havířov |accessdate=8 January 2019 |location=Havířov, Czech Republic
  4. 4.0 4.1 cite news |last1=Zuckerman |first1=Esther |title=A Quick GIF Guide to Ice Dance |url=https://www.theatlantic.com/entertainment/archive/2014/02/quick-guide-ice-dance/358117/ |accessdate=8 January 2019 |work=The Atlantic Monthly |date=14 February 2014
  5. ISU No. 2239, p. 3
  6. S&P/ID 2018, p. 141
  7. cite web |last1=Brown |first1=Mickey |title=Team USA scores four medals at JGP opener |url=https://web.archive.org/web/20170702044937/http://web.icenetwork.com/news/article.jsp?ymd=20100828&content_id=14031876&vkey=ice_news |website=icenetwork.com |accessdate=10 January 2020 |date=28 August 2010
  8. cite web |title=Progression of Highest Score: Ice Dance Rhythm Dance Score |url=http://www.isuresults.com/isujsstat/phsdrd.htm |website=isuresults.com |date=10 December 2019 |publisher=International Skating Union |accessdate=10 January 2020
  9. 9.0 9.1 9.2 Rulebook, p. 247
  10. Rulebook, p. 248
  11. 11.0 11.1 cite web |title=Special Regulations & Technical Rules Single & Pair Skating and Ice Dance 2018 |url=https://www.isu.org/inside-single-pair-skating-ice-dance/figure-skating-rules/regulations-rules-fs/file |publisher=International Skating Union |accessdate=3 September 2018 |date=June 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_சறுக்கு_நடனம்&oldid=3925335" இலிருந்து மீள்விக்கப்பட்டது