பன்னாட்டுக் கலைப்பொருட்கள் மீட்பு நிறுவனம்

பன்னாட்டுக் கலைப்பொருட்கள் மீட்பு நிறுவனம் (Art Recovery International) முன்னர் இதன் பெயர் கலை மீட்புக் குழு என்பதாகும். 2013-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.[1] இதன் பணி சர்வதேச கலைச் சந்தை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரிய நிறுவனங்களுக்கு உரிய விடாமுயற்சி, சர்ச்சை தீர்வு மற்றும் கலைப்பொருட்கள் மீட்பு சேவைகளை வழங்கும் ஒரு தனியார் நிறுவனமாகும். [2]இந்நிறுவனம் களவாடப்பட்ட மற்றும் உரிமை கோரப்பட்ட கலைப் படைப்புகளை மீட்டெடுப்பதில் நிபுணத்துவம் பெற்றது.

பன்னாட்டுக் கலைப்பொருள் மீட்பு நிறுவனம்
நிறுவுகை2013
நிறுவனர்(கள்)கிறிஸ்டோபர் ஏ. மரினெல்லோ
தொழில்துறைகளவாடப்பட்ட கலை மற்றும் தொல்பொருட்கள் மீட்புச் சேவைகள்
இணையத்தளம்artrecovery.com

இந்நிறுவனம் காணாமல் போன கலைப்பொருட்களுக்கு உரிமை கோரும் வகையிலான, ஆர்ட்கிளைம் {Art Claim) எனும் தரவுத்தளத்தை 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. 2016-ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் இத்தனியார் நிறுவனம் ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாக நிறுவப்பட்டது.

வரலாறு

தொகு

பன்னாட்டுக் கலைப்பொருள் மீட்பு நிறுவனம், உலகின் கலை மற்றும் தொல்லியல் அருங்காட்சியகங்களில் திருடப்பட்ட மற்றும் உரிமை கோரப்பட்ட கலைப் படைப்புகளை மீட்டெடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஏ. மரினெல்லோவால் 2013இல் நிறுவப்பட்டது. நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பு, மரினெல்லோ, கலை இழப்புப் பதிவேட்டின் பொது ஆலோசகராக இருந்தார் [3] [4] கலை இழப்புப் பதிவேட்டின் பொது ஆலோசகராக இருந்தார். 2006-2013 வரையிலான கலை இழப்புப் பதிவேடுக்கான அனைத்து வெற்றிகரமான கலை மீட்புகளுக்கும் மரினெல்லோ பொறுப்பு வகித்தார். 2013ல், மரினெல்லோ கலைப்பொருள் இழப்பு பதிவேட்டின் (Art Loss Register) தலைவர் ஜூலியன் ராட்க்ளிஃப்பின் முறைகளில் அதிருப்தி அடைந்தார். மேலும் தனது சொந்த கலை மீட்பு நிறுவனத்தையும், திருடப்பட்ட கலைப்பொருட்களின் தரவுத்தளத்தையும் உருவாக்க முடிவு செய்தார். வழக்குகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இவரை பின்பற்றினர். இவர் நிறுவிய பன்னாட்டுக் கலைப்பொருள் மீட்பு நிறுவனம் வெற்றியையும் பாராட்டையும் பெற்றது.[5] நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் சார்பு அடிப்படையில் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Stolen Lindauer paintings 'radioactive'". Financial Times. http://www.nzherald.co.nz/theft/news/article.cfm?c_id=344&objectid=11834097. 
  2. Adam, Georgina (16 January 2015). "Finders Keepers". Financial Times. http://www.ft.com/cms/s/0/e3ab8abc-9c01-11e4-a6b6-00144feabdc0.html. 
  3. "The Sherlock Holmes of Nazi Looted Art".
  4. Clegg, Alicia (20 February 2011). "The job: Art Recovery Specialist". Financial Times. http://www.ft.com/cms/s/0/3421c49c-3b9a-11e0-a96d-00144feabdc0.html#axzz3an5955Lc. 
  5. "Nazi looted Matisse work returned by Norwegian gallery".

வெளி இணைப்புகள்

தொகு