பன்னாட்டுக் குடும்ப நாள்
பன்னாட்டுக் குடும்ப நாள் அல்லது உலகக் குடும்ப நாள் (International Day of Families) என்பது ஆண்டுதோறும் மே 15 ஆம் நாள் கொண்டாடப்படும் நிகழ்வாகும். 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இதற்கான தீர்மானத்தை (A/RES/47/237) உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் முகமாக நிறைவேற்றியது. குடும்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கவும், குடும்பங்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் புள்ளிவிவர செயல்முறைகள் குறித்த அறிவை அதிகரிக்கவும் இப்பன்னாட்டு நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.[1][2] 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை பன்னாட்டுக் குடும்ப தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கருப்பொருட்கள்
தொகுஒவ்வோர் ஆண்டும், ஐ.நா. பொதுச்செயலாளர் குறிப்பிட்ட, பொருந்தக்கூடிய குறிக்கோளை அறிவிக்கிறார்.
- 2021 - "குடும்பங்களும் புதிய தொழிநுட்பங்களும்"[3]
- 2020 - “அபிவிருத்தியில் குடும்பங்கள்: கோபனாவன், பெய்ஜிங் + 25”[4][5]
- 2019 - "குடும்பங்களும் காலநிலை நடவடிக்கைகளும்: வ.வ.குவில் கவனம் 13"[6]
- 2018 - "குடும்பங்களும் சமூகங்களும்"[7]
- 2017 - "குடும்பங்கள், கல்வி, நல்வாழ்வு"[8]
- 2016 - "குடும்பங்கள், ஆரோக்கியமான வாழ்க்கை, நிலையான எதிர்காலம்"
- 2015 - "பொறுப்பான ஆண்கள்? - பாலினச் சமனிலை, குழந்தைகளின் உரிமைகள்"
மேற்கோள்கள்
தொகு- ↑ Edmund Jan Osmańczyk, Anthony Mango (2003), Encyclopedia of the United Nations and international agreements, p. 699
- ↑ UN: International Day of Families
- ↑ "International Day of Families, 15 May 2021". UN.
- ↑ "International Day of Families 2020: Date, Theme and Quotes to Share with Your Loved Ones". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.
- ↑ "International Family Day 2020: The Whole Earth Is One Family". S A NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-15. பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.
- ↑ "International Family Day: Date, Importance, Theme - All You Need To Know". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.
- ↑ "International Day of Families, 15 May 2018". UN.
- ↑ "2017 International Day of Families". UN.