பன்னாட்டுத் துருவக் கரடி நாள்

பன்னாட்டுத் துருவக் கரடி தினம் (International Polar Bear) என்பது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 27 அன்று கொண்டாடப்படுகிறது.[1][2] துருவக் கரடி அம்மாக்கள் மற்றும் குட்டிகள் தங்கள் குகைகளில் தூங்கும் காலப்பகுதியுடன் ஒத்துப்போகவும், துருவக் கரடியின் பாதுகாப்பு நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

பன்னாட்டுத் துருவக் கரடி நாள்
Polar bear with young - ANWR.jpg
நாள்February 27
நிகழ்வுவருடாந்திர

விளக்கம்தொகு

பன்னாட்டுத் துருவக் கரடி நாள், புவி வெப்பமடைதல் காரணமாகப் பனி உருகுவதால் துருவக் கரடியின் மக்கள்தொகையில் ஏற்படும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் கார்பன் வெளியீட்டினை குறைப்பதற்காக வெப்பநிலைநிறுத்தியினைக் குறைப்பது அல்லது வாகனப் பயன்பாட்டினை குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய இந்த நாள் மக்களை ஊக்குவிக்கிறது.[3] வீடுகளில் ஆற்றல் திறன் கொண்ட காப்பு நிறுவலை ஊக்குவிக்கவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.[4]

கடைபிடித்தல்தொகு

 
ஸ்வால்பார்டின் வடக்கே பனிக்கட்டி சறுக்கல் பகுதியில் துருவ கரடி (உர்சஸ் மாரிடிமஸ்).

உயிரியல் பூங்காக்கள் துருவக் கரடி பாதுகாப்பு பற்றிக் கற்பிக்கவும், துருவக் கரடி குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் கண்காட்சிகள் மூலம் இந்த நாளை பயன்படுத்துகின்றன.[5][6] இந்த கொண்டாட்டங்கள் அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் துணை காலநிலை பிரச்சார மேலாளரான ஜாக் ஷாபிரோ, காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினையில் காங்கிரசின் நடவடிக்கையின் அவசியத்தை வாதிடுவதற்கு இந்த நாளைப் பயன்படுத்தினார்.[7] பன்னாட்டுத் துருவக் கரடி நாளினை முன்னிட்டு 2014ஆம் ஆண்டு சசுகாட்செவன் பல்கலைக்கழகம் தனது வெப்பநிலைநிறுத்தியினை கோடையில் இரண்டு பாகையும் மற்றும் குளிர்காலத்தில் இரண்டு பாகை செல்சியசு குறைப்பதாக அறிவித்தது. இந்த முடிவு பல்கலைக்கழகத்தின் கார்பன் உமிழ்வை இரண்டாயிரம் டன்கள் குறைக்கும் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு ஆண்டுக்கு இருநூறு ஆயிரம் டாலர்களை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[8] தகவல் தேடல் மூலம் துருவக் கரடிகள் பற்றிய விழிப்புணர்வை இணையத்தில் ஏற்படுத்துவதில் பன்னாட்டுத் துருவக் கரடி நாள் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[9]

மேற்கோள்கள்தொகு

  1. "International Polar Bear Day". Polar Bears International. 2021-05-02 அன்று பார்க்கப்பட்டது.
  2. "International Polar Bear Day". World Wildlife Fund (ஆங்கிலம்). 2021-05-02 அன்று பார்க்கப்பட்டது.
  3. Netburn, Deborah. "It's International Polar Bear Day: What you can do to help". Los Angeles Times. 23 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. Yandell, Inga. "International Polar Bear Day 2013". Wildlife Warriors. 1 July 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "International Polar Bear Day". Denver Zoo. 28 May 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Celebrate International Polar Bear Day at the Zoo". Milwaukee County Zoo. 23 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. Shapiro, Jack. "What humans and polar bears have in common". 23 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
  8. "SENS and U of S celebrate International Polar Bear Day". University of Saskatchewan. 28 May 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
  9. Chua, Marcus A.H.; Tan, Audrey; Carrasco, Luis Roman (2021). "Species awareness days: Do people care or are we preaching to the choir?". Biological Conservation 255: 109002. doi:10.1016/j.biocon.2021.109002.