பன்னாட்டு கல்வி நாள்

ஆண்டுதோறும் சனவரி மாதம் 24 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

பன்னாட்டு கல்வி நாள் (International Day of Education) ஆண்டுதோறும் சனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. கல்விக்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1] 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, உலகளாவிய அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான கல்வியின் பங்கைக் கொண்டாடும் வகையில், சனவரி 24 ஆம் தேதி பன்னாட்டு கல்வி நாளாக அறிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.[2][3][4]

வரலாறு

தொகு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் சனவரி மாதம் 24 ஆம் தேதி பன்னாட்டு கல்வி நாளாக அறிவிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 24 ஆம் தேதி முதல் பன்னாட்டு கல்வி நாள் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறிவிப்பு உலகம் முழுவதும் பரவி வருகிறது. அவர்களின் நேர்மையான முயற்சிகள் உலகெங்கிலும் நம்பிக்கையுடனும் வாய்ப்புகளுடனும் ஆதரிக்கப்படும் ஒரு பண்பட்ட சமுதாயத்தை உருவாக்கும். படித்த தனிநபரின் முன்னேற்றத்தில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டும்.[5][6]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "UN General Assembly proclaims 24 January International Day of Education". UNESCO. 2018-12-05. பார்க்கப்பட்ட நாள் 2019-10-05.
  2. "First-ever International Day of Education". 2019-01-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-09. UNESCO
  3. "Prvo obilježavanje Međunarodnog dana obrazovanja - 24. januara" (in போஸ்னியன்). myright.ba. பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
  4. "24 Janari:Dita Ndërkombëtare e Arsimit". www.rtklive.com (in அல்பேனியன்). Prishtina: Radio Television of Kosovo. 24 January 2019. Archived from the original on 2020-02-14. பார்க்கப்பட்ட நாள் 12 December 2019.
  5. "International Day of Education 2021: Theme, History, Significance". S A NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-22. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
  6. "Why January 24 is celebrated as 'Education Day' globally". The Indian Express (in ஆங்கிலம்). 2020-01-24. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டு_கல்வி_நாள்&oldid=3438823" இலிருந்து மீள்விக்கப்பட்டது