பன்னாட்டு ஜூனியர் சேம்பர்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பன்னாட்டு ஜூனியர் சேம்பர் (Junior Chamber International) சுருக்கமாக ஜே.சி.ஐ. என அழைக்கப்படும் அமைப்பு இலாப நோக்கற்ற பன்னாட்டு தன்னார்வ தொண்டு அமைப்பாகும்.[1] .இதில் 18 வயது முதல் 40 வயதுவரையிலான இளைஞர்கள் மட்டும் உறுப்பனராக இருக்கலாம்..[2]இவவமைப்பில் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதை ஒருங்கிணைக்க பன்னாட்டலவிலும்,தேசிய அளவிலும் அமைப்புகள் உள்ளன. இது 1944இல் மெக்சிகோவில் துவக்கப்பட்டது. இவ்வமைப்பு இளைஞர்களை பொதுச்சேவையில் ஈடுபடுவதையும், அவர்கள் நல்ல குடிமக்களாக இருப்பதையும் ஊக்குவிக்கம்விதமாக செயல்படுகிறது.[1] இது ஜே.சி.ஐ. ஓர்ல்டு என்ற பெயரில் ஆறு மொழிகளில் அரையாண்டு இதழை வெளியிடுகிறது.[1] இவவமைப்பின் பன்னாட்டு ஆண்டுக்கூட்டமும், வட்டார ஆண்டுக்கூட்டமும், ஒவ்வோராண்டும் நவம்பர் மாதத்தில் நடக்கிறது.[3]
உருவாக்கம் | திசம்பர் 11, 1944 |
---|---|
நிறுவனர் | ஹென்றி ஜிசின்பையிர் |
வகை | என்.ஜி.ஓ |
நோக்கம் | சமூகப் பொறுப்புள்ள இளைஞர்கள் |
தலைமையகம் |
|
ஆள்கூறுகள் | 38°39′48″N 90°34′28″W / 38.663263°N 90.574379°W |
மூலம் | மெக்சிகோ |
சேவைப் பகுதி | உலகம்முழுவதும் |
முறை | சமூக சேவை |
தலைவர் | இஸ்மயில் ஹசன்டர் (2015) |
செக்ரட்டரி ஜெனரல் | டென்னிஸ் லகசோன் குன்னன் |
முழக்கம் | Be Better |
வலைத்தளம் | www |
இந்தியவில்
தொகுஇவ்வமைப்பு இந்தியாவில் 1949ஆம் ஆண்டு கல்கத்தாவில் துவக்கப்பட்டது. பின்னர் நாட்டின் பல இடங்களில் துவக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகளுடன் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Jaycees International", in Edward Lawson, Mary Lou Bertucci (1996). Encyclopedia of human rights, second edition. Washington, DC: Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781560323624. p. 911.
- ↑ "Welcome to JCI - Young Active Citizens Creating Positive Change". Junior Chamber International. Archived from the original on 2010-08-21. பார்க்கப்பட்ட நாள் 2010-08-15.
- ↑ John Clark (1995). A Legacy of Leadership: The U.S. Junior Chamber of Commerce. p. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0964545608.