பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள்
பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் (International Holocaust Remembrance Day) என்பது பெரும் இன அழிப்பினால் உயிரிழந்தவர்களுக்காக 27 சனவரி நினைவு கொள்ளப்படும் பன்னாட்டுநினைவு நாள் ஆகும். இப்பெரும் இன அழிப்பினால் நாட்சிப் படைகளினாலும் அதன் கூட்டாளிகளினாலும் 6 மில்லியன் யூதர்கள், 2 மில்லியன் நாடோடி இன மக்கள் (உரோமா மற்றும் சின்டி), 15,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் மில்லியன் கணக்கான ஏனையவர்கள் இனப்படுகொலையால் அழிக்கப்பட்டனர். இந்நாள், 42வது கூட்ட அமர்வின்போது 1 நவம்பர் 2005 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் 60/7 னால் உருவாக்கப்பட்டது.[1] நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள் விடுதலை மற்றும் பெரும் இன அழிப்பு நிறுத்தப்பட்ட 60வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்காக 24 சனவரி 2005 அன்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைகளின் சிறப்பு அமர்வின் பின் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.[2]
பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் | |
---|---|
நாள் | 27 சனவரி |
நிகழ்வு | ஆண்டுக்கொரு முறை |
27 சனவரி 1945 அன்று பெரும் நாட்சி மரண முகாமான அவுஷ்விட்ஸ் வதை முகாம் சோவியத் படைகளினால் விடுவிக்கப்பட்டது.
இதனையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "The Holocaust and the United Nations Outreach Programme". United Nations. 1 November 2005. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012.
- ↑ "28th Special Session of the General Assembly". United Nations. 24 January 2005. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012.