பன்னாட்டு வர்த்தக மையம் (கட்டடம்)
பன்னாட்டு வர்த்தக மையம் (International Commerce Centre) என்பது ஹொங்கொங்கில் கட்டப்பட்டுள்ள வானளாவிகளிலேயே மிக உயரமான வானளாவி ஆகும். அதாவது ஹொங்கொங்கில் உள்ள உயரமான கட்டடம் இதுவாகும். இதனைச் சுருக்கமாக ஐசிசி கட்டடம் என்றழைப்பர். இந்த வானளாவி தற்போதைக்கு உலகில் உள்ள உயரமான வானளாவிகள் பட்டியலில், நான்காவது இடத்தில் உள்ளது. இது 108 அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ளது. 484மீ உயரமுள்ள இந்த வானளாவியின் கட்டுமானப் பணிகள் 2010 ஆம் ஆண்டு நிறைவுற்றன. இவ்வானளாவி ஹொங்கொங்கில் கவுலூன் தீபகற்பத்தில், மேற்கு கவுலூன் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த வானளாவி கட்டப்பட்டதும் ஹொங்கொங்கிலேயே உயரமான வானளாவி இதுவானது.
பன்னட்டு வர்த்தக மையம் International Commerce Centre | |
பன்னாட்டு வர்த்தக மையம் மற்றும் கூட்டுறவு சதுரங்கம் மேம்பாட்டகம்
| |
தகவல் | |
---|---|
அமைவிடம் | ஹொங்கொங் |
ஆள்கூறுகள் | 22°18′12.21″N 114°9′36.61″E / 22.3033917°N 114.1601694°E |
நிலை | நிறைவடைந்தது |
தொடக்கம் | 2002 |
கட்டப்பட்டது | 2002-2010 |
திறப்பு | 2010 |
பயன்பாடு | தங்குமிடங்கள், கவனிப்பாய்வு, பணிமனை, வாகன நிறுத்தகம், வணிக கடைத்தொகுதி |
கூரை | 484.0 m (1,587.9 அடி) |
கடைசித் தளம் | 476.0 m (1,561.7 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 108[1] |
தளப் பரப்பு | 262,176 m2 (2,822,039 sq ft) |
உயர்த்தி எண்ணிக்கை |
|
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் |
|
அமைப்புப் பொறியாளர் |
Arup |
Developer | Sun Hung Kai Properties |
முகாமை | Kai Shing Management Services Limited |
References: [2][3]
|
மேற்கோள்கள்
தொகு- ↑ International Commerce Centre at CTBUH
- ↑ "International Commerce Centre - SkyscraperPage.com". பார்க்கப்பட்ட நாள் 3 October 2007.
- ↑ "International Commerce Centre - www.shkp-icc.com - developer". பார்க்கப்பட்ட நாள் 3 October 2007.