அனைத்துலக விண்வெளி நிலையம்

(பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே நம் நில உருண்டையைத் தாழ்-புவி சுற்றுப்பாதையில் (low-earth orbit) சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம். பன்னாட்டு மக்கள் ஒன்றாக உழைத்து உருவாக்கி வரும் ஒரு விண்வெளி நிலையம். இதனை ஆங்கிலத்திலே International Space Station (ISS) என்பர். இந்த அனைத்துலக விண்வெளி நிலையம் (முதலெழுத்துச் சுருக்கமாக தமிழில் அ.வி.நி.), நிலவுருண்டையில் இருந்து 360 கி.மீ உயரத்திலே, காற்று(வளி) மண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியிலே, 92 மணித்துளிகளுக்கு ஒருமுறை நில உருண்டையச் சுற்றி வருகின்றது. நவம்பர் 1998ல் நிறுவப்பட்ட பின் 2005ஆம் ஆண்டு சூன் மாதம் வரையிலுமே சுமார் 37,500 தடவைக்கும் மேலாக உலகைச் சுற்றி வந்துள்ளது.

அனைத்துலக விண்வெளி நிலையம்- ஆகஸ்ட் 7, 2005ல் எடுத்த படம்
அனைத்துலக விண்வெளி நிலையதில் மாதிரிகளை சேமித்தல்

இந்த அவநியை உருவாக்கியது ஒரு பெரும் பொறியியல் வெற்றி. இந்நிலையத்தை 2011ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டிமுடிக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இந்நிலையத்தை இயக்கவும், பழுது பார்க்கவும் ஆய்வுகள் நடத்தவும் எப்பொழுதும் இரண்டு பேர் இருப்பர். நவம்பர் 2, 2000ல் இருந்து யாரேனும் 2 பேர் இருந்து வந்திருக்கிறார்கள். இந்நிலையத்தை இயக்கத்தேவையான எல்லாப் பொருட்களையும், கட்டுமானப் பொருட்கள் முதற்கொண்டு எல்லாவற்றையும், பூமியில் இருந்து விண்ணூர்தி வழியாக எடுத்துச் செல்லவேண்டும். இப்பெரும் பன்னாட்டுக் கூட்டு முயற்சியில் பங்கு கொள்ளும் நிறுவனங்கள் யாவை என்றால், அமெரிக்காவின் நாசா (NASA), உருசிய கூட்டாட்சி விண்வெளி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்,சப்பானிய வான் விண்வெளி வெளித்தேடல் நிறுவனம், கனடா விண்வெளி நிறுவனம் ஆகும். இவையன்றி, பிரேசில் விண்வெளி நிறுவனமும் இத்தாலிய விண்வெளி நிறுவனமும் பல்வேறு நிலைகளில் பங்கு கொள்ளுகின்றன.

இந்த அவநியில் பன்னாட்டைச் சேர்ந்த பலர் சென்று இருந்து திரும்பி இருக்கிறார்கள். வியப்பூடும் விதமாக, பொது மக்களில் மூன்று பேரும் சுற்றுலாப் பயணமாக சென்று திரும்பியுள்ளார்கள்.

உருசியர் கிரி்க்காலேவ் அவிநியில்
கொலம்பியா விண்ணூர்தி புறப்பாடு
அவிநி அடையாளப்பட்டை

பயன்பாடு

தொகு

அமெரிக்க நாட்டின் நாசா அமைப்புக்கும் ரோசவியகாசுமோசு அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அனைத்துலக விண்வெளி நிலையமானது ஒரு ஆய்வகமாகவும், விண்ணியல் நோக்ககமாகவும் மற்றும் தொழிலகமாகவும் செயல்பட உருவாக்கப்பட்டது. மேலும் இது நிலவு, செவ்வாய் மற்றும் குறுங்கோள்களை நோக்கி செலுத்தப்படும் எதிர்கால விண்கலன்களுக்கு அணுகு தலமாகவும், அவற்றை பேணுமிடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. 2010ஆம் ஆண்டின் அமெரிக்க விண் கொள்கையில் இந்த அனைத்துலக விண்வெளி நிலையத்தை பொருளாதார, அரசியல் மற்றும் கல்விக்காகவும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பூமியில் மனிதர்களால் அடைய முடியாத ஈர்ப்பு விசையில்லா நிலையை அ.வி.நி. அமைத்துத் தருகிறது. அத்தகைய நிலையில் செய்ய வேண்டிய ஆராய்ச்சிகளுக்கு இது பெருந்துணையாக உள்ளது. அ.வி.நி. இல்லையெனில் இந்த ஆய்வுகளை ஆளில்லா விண்கலங்கள் மூலமே செய்திருக்க முடியும். அதற்கு செலவு அதிகமாவதுடன் மனிதர்களால் அருகில் இருந்து கண்காணிக்க இயலாது. ஒவ்வொரு ஆய்வுக்கும் வெவ்வேறு வானூர்திகளையும் விண்வெளி வீரர்களையும் அனுப்பும் முறையை இது மாற்றியுள்ளது. அறிஞர்கள் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தே ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் தேவைப்படும் மாற்றங்களையும் இங்கிருந்தே செய்வதற்கு அ.வி.நி. வாய்ப்பளிக்கிறது. இங்கு செய்யப்படும் ஆய்வுகள் பொதுவாக விண்-உயிரியல், வானியல், வான்-மருந்தியல் மற்றும் உயிர்-அறிவியலை சார்ந்தே இருக்கின்றன.

ரஷ்யாவின் விலகல் அறிவிப்பு

தொகு

இந்த சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தில் 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் பங்கு கொள்ளப் போவதில்லையெனெ ரஷ்யா அறிவித்துள்ளது.[1]

அனைத்துலக விண்வெளி நிலையம் (அ.வி.நி.) கட்டுதல்

தொகு

அவிநியின் அமைப்பு

தொகு
 
அனைத்துலக விண்வெளி நிலையத்தின் அமைப்பு

மேற்கோள்கள்

தொகு