பன்னிரண்டு நடன இளவரசிகள் (கதை)

இடாய்ச்சு மொழி விசித்திரக் கதை

பன்னிரண்டு நடன இளவரசிகள் (அல்லது தேய்ந்து போன நடன காலணிகள் அல்லது நடனமாடி துண்டுகளாக காலணிகள்) ( இடாய்ச்சு மொழி: Die zertanzten Schuhe ) கிரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்டு 1815 இல் (KHM 133) கிரிம்ஸ் தேவதைக்கதைகள் புத்தகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஜெர்மன் விசித்திரக் கதையாகும். [1] இது ஆர்னே-தாம்சன் வகைப்பாட்டில் 306 வகையை சார்ந்தது . [1]

சார்லஸ் டியூலின் இதன்மற்றொரு பிரெஞ்சு பதிப்பை தனது பியர் குடிகாரனின் கதைகள் (1874) புத்தகத்தில் சேகரித்தார், அந்த புத்தகத்தில் கிரிம் சகோதரர்களின் கதையின் மற்றொரு பதிப்பு என்பதை கூறியுள்ளார். [2] அலெக்சாண்டர் அஃபனாசியேவ் தனது ரசிய நாட்டார் கதைத்தொகுப்பில் இரவு நடனங்கள் என்ற தலைப்பில் இந்த கதையின் இரண்டு ரசிய பின்னணி பகுப்புகளை எழுதியுள்ளார். [3]

ஸ்காட்டிஷ் நாட்டார் கதை தொகுப்பான கேட் கிராக்கர்நட்ஸ் - க்கு இக்கதை மிகவும் நெருக்கமான ஒப்புமையாக உள்ளது , ஆனால் பாத்திரத்தை தலைகீழாக மாற்றி, இதில் கதாநாயகி நடனம் ஆடும் இளவரசரைப் பின்தொடர்கிறார்.

தோற்றம் தொகு

1857 ஆம் ஆண்டில் கிரிம்ஸின் விசித்திரக் கதைகள் தொகுதி 2 இன் முதல் பதிப்பில், சகோதரர்கள் கிரிம் என்பவரால் இந்தக் கதை வெளியிடப்பட்டது. அவர்களின் ஆதாரம் ஜென்னி வான் ட்ரோஸ்டே ஜூ ஹல்ஷாஃப் அவர்களின் படைப்புகளாகும். இது முதலில் KHM 47 என எண்ணப்பட்டது, ஆனால் அடுத்தடுத்த பதிப்புகளில் KHM 133 ஆகத் தோன்றியது. [1]

கதை சுருக்கம் தொகு

ஒரு நாட்டின் அரசனுக்கு பன்னிரண்டு இளவரசிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே அறையில் பன்னிரண்டு வெவ்வேறு படுக்கைகளில் தூங்குகிறார்கள். ஒவ்வொரு இரவும், அவர்களின் அறை கதவுகள் அவர்களின் தந்தையால் பத்திரமாகப் பூட்டப்படுகின்றன. ஆனால் மறுநாள் காலையில், அவர்களின் நடன காலணிகள் இரவு முழுவதும் நடனமாடியது போல் கிழிந்திருந்தன. ஒவ்வொரு நாளும் இது தொடரவே ராஜா, குழப்பமடைந்து, தனது மகள்களிடம் விளக்கம் கேட்கிறார், ஆனால் அவர்கள் எதையும் சொல்ல மறுக்கிறார்கள். மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளுக்குள் இளவரசிகளின் நள்ளிரவு ரகசியத்தைக் கண்டறியும் எந்தவொரு மனிதனுக்கும் ராஜா தனது ராஜ்யத்தையும் அவன் தேர்ந்தெடுக்கும் ஒரு மகளையும் திருமணம் செய்து கொடுக்க உறுதியளிக்கிறார், ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் தோல்வியுற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

பல இளவரசர்கள் அந்த முயற்சியில் தோல்வியடைந்து மரணமடைந்தனர். போரிலிருந்து திரும்பிய ஒரு வயதான சிப்பாய் மன்னரின் இந்த அழைப்புக்கு இணங்கி தான் இந்த ரகசியத்தைக் கண்டறிவதற்காக வருகிறார். ஒரு மரத்தின் வழியாகப் பயணிக்கும்போது, ஒரு வயதான பெண்மணியை அவர் சந்திக்கிறார். அவள் அவருக்கு  மன்னரின் மகள்களை எவரும் அறியாமல் கண்காணிக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு மந்திரிக்கப்பட்ட மேலங்கியைக் கொடுத்து, மாலையில் அந்த இளவரசிகள் என்ன கொடுத்தாலும் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம் என்றும் கூறுகிறார். அவர்கள் வெளியேறும் வரை அயர்ந்து தூங்குவது போல் நடிக்கவும் சொல்கிறாள்.

மற்றவர்களைப் போலவே இந்த காவலாளிக்கும் அரண்மனையில் நல்ல வரவேற்பை கொடுக்கின்றனர் அன்று  மாலையில், அரச இளவரசி (மூத்த மகள்) அவரது அறைக்கு வந்து நைச்சியமாக பேசி அவருக்கு ஒரு கோப்பை மதுவை வழங்குகிறார். காட்டில் சந்தித்த மூதாட்டியின் அறிவுரையை நினைவு கூர்ந்த வீரனோ, அதை ரகசியமாக தூக்கி எறிந்துவிட்டு, உறங்குவது போல் சத்தமாக குறட்டை விடத் தொடங்குகிறான்.

பன்னிரண்டு இளவரசிகளும் அந்த  சிப்பாய் தூங்கிக்கொண்டிருப்பதை உறுதிசெய்து, விருந்து வீட்டிற்கு செல்வது போல நன்றாக நடனமாடும் கவுன்களையும் புதிய காலணிகளையும் அணிந்துகொண்டு, தங்கள் தரையில் உள்ள ஒரு பொறி கதவு மூலம் தங்கள் அறையிலிருந்து தப்பினர். இதைப் பார்த்த சிப்பாய், தனது மந்திர அங்கியை அணிந்துகொண்டு  அவர்கள் அறியாமலே அவர்களைப் பின்தொடர்ந்தார்.  ஆனால் தெரியாமல் அவர் இளைய இளவரசியின் மேலங்கியின் மீது காலடி வைத்து மாட்டி கொள்கிறார். ஆனால் அவரது உருவம் யாருக்கும் தெரியாததால், இளைய இளவரசியின் எச்சரிக்கை மூத்த இளவரசியால் புறந்தள்ளப்பட்டு தொடர்ந்து பயணிக்கின்றனர். அவர்கள் செல்லும் பாதை அவர்களை மூன்று மரங்களின் தோப்புகளுக்கு இட்டுச் செல்கிறது; முதலாவது வெள்ளி இலைகள், இரண்டாவது தங்கம், மூன்றாவது பளபளக்கும் வைரம். தான் வந்ததற்கு ஆதாரமாக எதாவது எடுத்து செல்ல விரும்பும் சிப்பாய், ஆதாரமாக ஒவ்வொரு மரத்திலிருந்து ஒரு கிளையை உடைக்கிறார். பின்னர் அவர்கள் ஒரு பெரிய தெளிவான ஏரி வரும்  வரை நடக்கிறார்கள். அங்கே பன்னிரண்டு இளவரசிகள் வருகைக்காக  பன்னிரண்டு படகுகள் , பன்னிரண்டு இளவரசர்களுடன் காத்திருக்கிறது. ஒவ்வொரு இளவரசியும் ஒவ்வொரு படகில் ஏறுகிறார்கள், சிப்பாய் பன்னிரண்டாவது மற்றும் இளைய இளவரசியுடன் அவரது படகில் ஏறுகிறார். சிப்பாய் படகில் இருப்பது தெரியாமல், இளவரசர் வேகமாக படகோட்டவில்லை என்று இளைய இளவரசி புகார் கூறுகிறார். ஏரியின் மறுபுறத்தில் ஒரு கோட்டை உள்ளது, அங்கே அனைத்து இளவரசிகளும் இளவரசர்களுடன் சென்று இரவு முழுவதும் நடனமாடுகிறார்கள்.

பன்னிரண்டு இளவரசிகளும் இரவு முழுவதும் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்கள், அவர்கள் காலணிகள் பிய்ந்து துண்டுகளாக போகும் வரையும் ஆடுகிறார்கள். எனவே அவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தங்கள் அறைக்கு திரும்புகின்றனர். இரண்டாவது மற்றும் மூன்றாவது இரவுகளில் இதே விசித்திரமான சாகசம் தொடர்கிறது, மூன்றாவது இரவில் சிப்பாய் தான் இருந்த இடத்தின் அடையாளமாக அங்கிருந்து ஒரு தங்கக் கோப்பையை எடுத்துச் செல்கிறான் என்பதைத் தவிர, எல்லாம் முன்பு போலவே நடக்கிறது. இளவரசிகளின் ரகசியத்தை அவர் அறிவிக்க வேண்டிய நேரம் வரும்போது, அவர் அந்த மூன்று மரங்களில் இருந்து வெட்டிய மூன்று கிளைகள் மற்றும் தங்கக் கோப்பையுடன் ராஜாவுக்கு முன் சென்று, தான் பார்த்த அனைத்தையும் ராஜாவிடம் கூறுகிறார். உண்மையை மறுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை இளவரசிகள் அறிந்து, அவர்களும்  ஒப்புக்கொண்டார்கள் . சிப்பாய் வயதானவராக இருந்த காரணத்தால் மூத்த இளவரசியை மணமகளாகத் தேர்ந்தெடுக்கிறார், மேலும் அவர் மன்னரின் வாரிசாக ஆக்கப்படுகிறார். பன்னிரண்டு இளவரசர்களும் இளவரசிகளுடன் நடனமாடிய காரணத்தால் பல இரவுகள் சாபத்திற்கு ஆளாகின்றனர்.

பின்னணி தொகு

கிரிம் சகோதரர்கள், தங்கள் நண்பர்களான ஹாக்ஸ்தாசன்ஸிடமிருந்து இக்கதையை அறிந்தனர். அவரோ மன்ஸ்டரில் அவரது நண்பரிடமிருந்து இக்கதையை தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பிற பதிப்புகள் ஹெஸ்ஸே மற்றும் பேடர்பார்ன் என்பதாக அறியப்பட்டன. ஹெஸ்ஸி பதிப்பில் ஹெஸ்ஸே கதை தொகுப்பில் ஒரு இளவரசி மட்டுமே ஒவ்வொரு இரவும் ஒரு டஜன் காலணிகளை அணிந்திருப்பார் என்று நம்பப்படுகிறது, சிப்பாய்க்கு பதிலாக ஒரு இளம் செருப்பு தயாரிப்பாளரின் உதவியாளர், அவளுடன் மற்ற பதினொரு இளவரசிகளும் கலந்துகொண்டதைக் கண்டுபிடிப்பதாக கதை சொல்லுகிறது. மேலும் இளவரசியின் மந்திரதை உடைந்து, அந்த உதவியாளர் இளவரசியை மணந்தார். பேடர்பார்ன் தொகுப்பில், மூன்று ராட்சதர்களின் துணையுடன் ஒரு அரண்மனையில் இரவில் நடனமாடும் மூன்று இளவரசிகள், [4] போதைப்பொருள் கலந்த மதுவை அந்த சிப்பாய் அப்புறப்படுத்திவிட்டு தூங்குவது போல் நடிக்கும் சூழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. [5]

விக்டோரியன் காலத்து எழுத்தாளர்கள் இளவரசிகளின் இருப்பிடத்தைக் கண்டறிய விரும்புபவர்கள் மீது சுமத்தப்பட்ட "'செய் அல்லது செத்துமடி'" என்ற அம்சத்தை விரும்பவில்லை, மேலும் அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிந்தனர். தோல்வியுற்ற வேட்பாளர்கள் மரணத்திற்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக விளக்கம் இல்லாமல் வெறுமனே காணாமல் போவதாக எழுதியுள்ளனர், ஆண்ட்ரூ லாங்கின் தொகுப்பில் தேடும் இளவரசர்கள் மறைந்து போகிறார்கள், மேலும் அவர்கள் மந்திரித்து நிலத்தடி உலகில் சிக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது. லாங்கின் பதிப்பின் கதாநாயகன் மைக்கேல் என்ற மாடு மேய்ப்பவர், அவர் இளைய இளவரசி லினாவை திருமணம் செய்துகொள்கிறார், மூத்தவள் அல்ல. அவரது சகோதரிகள் ஒவ்வொருவரும் மாயத்திலிருந்து விடுபட்டவுடன் போட்டியாளர்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள்..

தங்கம், வெள்ளி மற்றும் வைர இலைகள் கொண்ட மரங்களின் தோட்டம் கில்காமேஷின் சுமேரிய காவியத்தில் இதேபோன்ற தோட்டத்தை நினைவுபடுத்துகிறது. [5]

கிரிம் சகோதரர்களின் தொகுப்பில் உள்ள இளவரசிகள் பெரும்பாலும் தீங்கிழைக்கும் பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகிறார்கள், அவர்கள் தங்கள் தந்தையிடம் பொய் சொன்னதற்காகவும் தோல்வியுற்றவர்கள் கொல்லப்படுவார்கள் என்று தெரிந்திருந்தும் அதற்காக அவர்கள் வருத்தமே படாமல் அவர்களின் மர்மம் தீர்க்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, தங்கள் ரகசியத்தை கண்டறிய வருபவர்களுக்கு போதை மருந்து கலந்த மதுவை மீண்டும் மீண்டும் கொடுக்கிறார்கள்.

மாறுபாடுகள் தொகு

இந்த கதை கண்டிப்பாக 17 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருக்க வாய்ப்பில்லை என்பதை இக்கதைகளின் பல்வேறு பகுப்புகளில் இருந்து அறியலாம் மேலும் இதன் பல வகைகள் வெவ்வேறு நாடுகளில் இருப்பதையும் அறியமுடிகிறது; . [6]

  • ஐரோப்பா :
    • ஸ்காட்லாந்துகேட்டி கிராக்கர்நட்ஸ் அல்லது கேத்தரின் கிராக்கர்நட்ஸ் [7]
    • பிரான்ஸ் - பன்னிரண்டு நடன இளவரசிகள்
    • போர்ச்சுகல் - மூரிஷ் இளவரசர் மற்றும் கிறிஸ்தவ இளவரசி, ஏழு இரும்பு செருப்புகள்
    • ஜெர்மனிதி ஷூஸ் தட் வார் டான்ஸ் டு பீசஸ், தி ட்வெல்வ் டான்சிங் பிரின்சஸ்ஸ்
    • டென்மார்க்பன்னிரண்டு ஜோடி தங்கக் காலணிகளுடன் கூடிய இளவரசி [8] [9]
    • ஐஸ்லாந்து - ஹில்ட், எல்வ்ஸ் ராணி ; ஹில்டூர் தேவதை ராணி ; ஹில்டூர், எல்வ்ஸ் ராணி [10]
    • செக் குடியரசு - மூன்று பெண்கள்
    • ஸ்லோவாக்கியா - மூன்று பெண்கள்
    • ஹங்கேரிதி ஹெல்-பென்ட் மிஸ்ஸஸ், தி இன்விசிபிள் ஷெப்பர்ட் லாட் [11]
    • ருமேனியாபன்னிரண்டு இளவரசிகளின் செருப்புகள், [12] தேய்ந்து போன செருப்புடன் கூடிய பன்னிரண்டு இளவரசிகள் [13]
    • ரஷ்யா - நடனமாடிய காலணிகள் ; எலெனா தி வைஸ் ; நள்ளிரவு நடனம் ; [14] இரகசிய பந்து
    • ஆர்மீனியா - தி ஜெயண்ட்-ஸ்லேயர்
  • ஆப்பிரிக்கா :
    • கேப் வெர்டே - துண்டுகளாக நடனமாடிய காலணிகள் ; [15] குலதெய்வங்களைப் பிரித்தல்: துண்டுகளாக நடனமாடப்பட்ட காலணிகள் [16]
  • மத்திய கிழக்கு :
    • துருக்கிமேஜிக் டர்பன், மேஜிக் விப் மற்றும் மேஜிக் கார்பெட் [17]
    • அரபு - தங்க நகரம்
  • ஆசியா :

மேற்கண்ட ஒவ்வொரு நாட்டின் கதைகளிலும் இளவரசிகள் எண்ணிக்கையில் வேறுபடுகிறார்கள், சில சமயங்களில் ஒரு கன்னிப்பெண்ணாகவும்,  மற்ற வகைகளில், இளவரசனோடு செல்லாமல் பிசாசு போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட கதாபாத்திரத்துடன் இரவு நடனத்திற்கு செல்கிறார் என்பதாகவும் உள்ளது.

ஒரு பிரெஞ்சு இலக்கிய பதிப்பு உள்ளது, இது சார்லஸ் டியூலின் தனது பியர் குடிகாரனின் கதைகள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். [20]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Ashliman, D. L. (2004). "The Shoes That Were Danced to Pieces". University of Pittsburgh.
  2. Charles Deulin, Contes du Roi Cambrinus (1874)
  3. Afanasyev, Alexander Nikolaevich. "The Midnight Dance". Russian Folk-Tales. https://en.wikisource.org/wiki/Russian_Folk-Tales/The_Midnight_Dance. 
  4. "Sur La Lune || Twelve Dancing Princesses Annotations". www.surlalunefairytales.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  5. 5.0 5.1 Opie 1992, pp. 188-9
  6. Thompson, Stith. The Folktale. University of California Press. 1977. pp. 34-35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-03537-2
  7. Grierson, Elizabeth Wilson. The Scottish fairy book. London, T.F. Unwin. 1918. pp. 253-267.
  8. Grundtvig, Svend. Gamle Danske Minder I Folkemunde. Tredje Samlung. Kjøbenhavn: C. G. Iversen. 1861. pp. 1-15.
  9. Stroebe, Clara; Martens, Frederick Herman. The Danish fairy book. New York: Frederick A. Stokes Co.. [ca. 1922] pp. 135-142.
  10. Icelandic Legends. Colleted by Jón Árnason. Translated by George E. J. Powell and Eiríkur Magnússon. London: Richard Bentley. 1864. pp. 85-95.
  11. "Der unsichtbare Schäferjunge". In: Stier, G. Ungarische Sagen und Märchen. Berlin: Ferdinand Dümmlers Buchhandlung, 1850. pp. 51-56.
  12. Mawer, E B. Roumanian fairy tales and legends. London: H. K. Lewis. 1881. pp. 1-20.
  13. Browne, Frances. In: "Roumanian Folk Tales (Continued)". In: Folklore 26, no. 4 (1915): 389-400. Accessed August 30, 2021. http://www.jstor.org/stable/1254835.
  14. Afanasʹev, Aleksandr Nikolaevich; Leonard Arthur Magnus. Russian Folk-tales. New York: E.P. Dutton, 1916. pp. 106-108.
  15. Parsons, Elsie Worthington Clews; and Hispanic Society of America. Folk-lore From the Cape Verde Islands. Cambridge, Mass.: and New York, American folk-lore society, 1923. pp. 219-293.
  16. Parsons, Elsie Worthington Clews; and Hispanic Society of America. Folk-lore From the Cape Verde Islands. Cambridge, Mass.: and New York, American folk-lore society, 1923. pp. 293-296.
  17. Kunos, Ignacz. Forty-four Turkish fairy tales. London: G. Harrap. pp. 87-94.
  18. Lang, Andrew. The olive fairy book. London; New York: Longmans, Green. 1907. pp. 188-197.
  19. McCulloch, William. Bengali household tales. London, New York [etc.]: Hodder and Stoughton. 1912. pp. 283-304.
  20. "Les Douze Princesses Dansantes" In: Deulin, Charles. Contes du Roi Cambrinus. Paris: E. Déntu. 1874. pp. 61-82.