பன்மொழிப் புலமை

(பன்மொழியாமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பன்மொழிப் புலமை (அ) பன்மொழியாமை (multilingualism) என்பது பல பல மொழிகளைப் ஒருவரோ அல்லது ஒரு சமூகமோ பயன்படுத்துவது மற்றும் பன்மொழிப்பயன்பாடை ஊக்குவிப்பதுமாகும். உலகமெங்கும் வாழும் மனிதர்களில் பலமொழிகளில் பேசக்கூடியவர்கள் ஒரேயொரு மொழியைப் பேசுபவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளார்கள்[1]. உலகமயமாக்கல், பண்பாட்டு வெளிப்படைத்தன்மை போன்ற காரணிகளால் பன்மொழிப் புலமையானது ஒரு சமூக தேவையாக, நிகழ்வாக உள்ளது[2]. இணையதளம் மூலமாக மிக எளிதாகச் செய்திகளைப் பெற்றுக்கொள்ள முடிவதும், ஒருவர் பல மொழி பேசுபவர்களுடனானத் தொடர்புகள் கொள்வது அதிகமாக நிகழ்வதாலும் பல மொழிகளைத் தெரிந்து கொள்வது எளிதில் ஏதுவாகிறது. பல மொழிகளைப் பேசுபவர்கள் பன்மொழியாளர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்[3].

செர்பியாவில் நொவி சாட்(Novi Sad) நகர மேயரின் அலுவலகத்திற்கு முன் அந்நகர அலுவல் மொழிகளாக உள்ள செருபிய மொழி, அங்கேரிய மொழி, சுலோவாக்கிய மொழி, பனோனியன் ரஷ்ய மொழி ஆகியவற்றில் எழுதப்பட்டுள்ள பன்மொழி அறிவிப்புப் பலகை.
சுவிட்சர்லாந்து நாட்டு கூட்டாட்சி அரசாங்கத்தின் இலச்சினையில் சுவிட்சர்லாந்தின் நான்கு தேசிய மொழிகளும் (சுவிட்சர்லாந்திய ஜெர்மன் மொழி, பிரான்சிய மொழி, இத்தாலிய மொழி, உரோமாஞ்சு மொழி கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "A Global Perspective on Bilingualism and Bilingual Education (1999), G. Richard Tucker, Carnegie Mellon University". Archived from the original on 2012-08-22. பார்க்கப்பட்ட நாள் 2014-06-29.
  2. "The importance of multilingualism". multilingualism.org. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  3. "Polyglot - definition of polyglot by the Free Online Dictionary, Thesaurus and Encyclopedia". Thefreedictionary.com. பார்க்கப்பட்ட நாள் 2010-07-10.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்மொழிப்_புலமை&oldid=3562326" இலிருந்து மீள்விக்கப்பட்டது