பன்வாரி லால் பைரவா

இந்திய அரசியல்வாதி

பன்வாரி லால் பைரவா (Banwari Lal Bairwa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1933 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்தார். இராசத்தான் மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.[1] இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையான மக்களவையில் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இதற்காக டோங்க் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பன்வாரி லால் பைரவா
Banwari Lal Bairwa
இராசத்தான் துணை முதலமைச்சர்
பதவியில்
1998 - 2003
நாடாளுமன்ற உறுப்பினர்
டோங்க் மக்களவைத் தொகுதி
பதவியில்
1980 - 1989
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-01-19)19 சனவரி 1933
டோங்க்கு, டோங்க் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு22 சூலை 2009(2009-07-22) (அகவை 76)
செய்ப்பூர், இராசத்தான், இந்தியா
தேசியம்Indian
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

2009 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 ஆம் தேதி இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் பன்வாரிலால் பைரவா தன்னுடைய 76 ஆவது வயதில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்வாரி_லால்_பைரவா&oldid=3828132" இலிருந்து மீள்விக்கப்பட்டது