பபூல்
பபூல் (Babool) என்பது 1987-ல் [1] பால்சாரா கைச்ஜீன் எனும் நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பற்பசை தயாரிப்பு ஆகும். இது கருவேலம் மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கருவேலம் மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொடியானது பாரம்பரியமாக இந்தியாவில் பற்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.[2] இந்த வணிக தயாரிப்பானது "பபூல் பபூல் பைசா வசூல்" என்ற கோஷத்துடன் மலிவான பற்பசையாக நிலைநிறுத்தப்பட்டது.[3] பபூல் பல்சராவின் மிகப்பெரிய வணிகத் தயாரிப்பாக இருந்தபோது, 2002ஆம் ஆண்டில் "பபூலைப் பயன்படுத்திச் சிறந்த நாளை தொடங்குங்கள்" என்ற சொற்றொடருடன் மீண்டும் தொடங்கப்பட்டது.[2] 2005 ஆம் ஆண்டில், பபூல் பல்சராவால் டாபருக்கு பல்சராவின் பிற பற்பசை வணிகத் தயாரிப்புகளான பிராமிசு மற்றும் மெசுவாக் உடன் ₹1.43 பில்லியன் (US$18 மில்லியன்) )க்கு விற்கப்பட்டது.[4][5] 2007ஆம் ஆண்டு நிலவரப்படி, பபூல் வணிகத்தின் மதிப்பு ₹1 பில்லியன் (US$13 மில்லியன்) ஆகும்.[6]
Product type | பற் பொருட்கள் |
---|---|
Owner | டாபர் |
Introduced | 1987 |
Related brands | பிராமிசு & மெசுவாக் |
Previous owners | பல்சார சுகாதார பொருட்கள் நிறுவனம் |
Website | https://www.daburdentalcare.com/ |
மேலும் பார்க்கவும்
தொகு- பற்பசை பிராண்டுகளின் பட்டியல்
- வாய்வழி சுகாதாரம் மற்றும் பல் கட்டுரைகளின் அட்டவணை
மேற்கோள்கள்
தொகு- ↑ All India Management Association (1989). Indian Management 28: 23.
- ↑ 2.0 2.1 "Balsara to revamp toothpaste portfolio". http://www.thehindubusinessline.in/2002/08/06/stories/2002080601060600.htm.
- ↑ "How Balsara Lost Its Bite". India. http://www.business-standard.com/india/storypage.php?autono=114199.
- ↑ "Dabur buys 3 Balsara group cos for Rs 143 cr". http://www.thehindubusinessline.in/2005/03/23/stories/2005032302380100.htm.
- ↑ "Dabur to buy Balsara for Rs 1499 cr". India. http://www.financialexpress.com/news/dabur-to-buy-balsara-for-rs-143-cr/125303/.
- ↑ "Dabur outpaces MNCs Colgate, HLL in oral care". http://articles.economictimes.indiatimes.com/2007-04-26/news/28462798_1_pepsodent-and-close-up-brands-oral-care-toothpaste-market.