டாபர்

இந்திய ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இயற்கை நுகர்வோர் தயாரிப்பு நிறுவனம்

டாபர் (Dabur) பர்மன் என்பவரால் 1884ல் தொடங்கப்பட்ட இந்திய நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இயற்கை நுகர்வோர் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.[3] இந்நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளரும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.[4]

டாபர் இந்தியா
வகைபொது நிறுவனம்
தலைமையகம்சாகிபாபாத், காசியாபாத், உத்தரப்பிரதேசம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்
  • அமித் பர்மன் (தலைவர்)
  • Mohit Malhotra (CEO)
தொழில்துறைநுகர்வோர் பொருள்கள்
உற்பத்திகள்
  • தனிப்பட்ட பாதுகாப்பு
  • சரும பராமரிப்பு
  • சுகாதாரம்
  • பானங்கள்
வருமானம்8,989 கோடி (US$1.1 பில்லியன்) (2020)[1]
இயக்க வருமானம்1,827 கோடி (US$230 மில்லியன்) (2020)[1]
நிகர வருமானம்1,444 கோடி (US$180 மில்லியன்) (2020)[1]
மொத்தச் சொத்துகள்9,354 கோடி (US$1.2 பில்லியன்) (2020)[1]
பணியாளர்7,740 (March 2020)[1]
இணையத்தளம்www.dabur.com
[2]

வரலாறு

தொகு

1880களின் நடுப்பகுதில், கொல்கத்தாவில் உள்ள ஆயுர்வேத பயிற்சியாளரான பர்மன்,காலரா, மலச்சிக்கல் மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை தயாரித்தார்.அவர் தனது ஆயுர்வேத சூத்திரங்களை பெருமளவில் உற்பத்தி செய்வதற்காக 1884 ஆம் ஆண்டில் டாபர் இந்தியா லிமிடெட் என்கின்ற நிறுவனத்தை அமைத்தார்.[5]

மருந்து மற்றும் சுகாதரம்

தொகு

டாபர் இந்தியாவின் முழு உரிமையாளரான டாபர் இன்டர்நேசனல், முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்சையின் பங்குகளை வைத்திருந்தது, இது சூன் 2012இல் விற்கப்பட்டது.[6]

சர்ச்சைகள்

தொகு

முன்னாள் நிர்வாக இயக்குநர் பிரதீப் பர்மன் 27 அக்டோபர் 2014 அன்று பாஜக அரசு கறுப்பு பணம் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியல் வெளியிட்ட போது இவர் அதில் இடம் பிடித்திருந்தார். இந்த கருப்பு பண குற்றச்சாட்டை இவர் நிராகரித்தார்.[7]

டிசமபர் 2020 இல், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கை, டாபர் தேன் மற்றும் பிற முக்கிய வர்த்தக குறிகளின் தயாரிப்புகளுடன், சர்க்கரை பாகுடன் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Dabur Ltd Results" (PDF). Dabur. Archived from the original (PDF) on 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-01-03.
  2. "Annual Report 2014-15". Dabur.com. Archived from the original on 2022-02-05. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. https://economictimes.indiatimes.com/dabur-india-ltd/infocompanyhistory/companyid-11796.cmsஇந்தியா டைம்சு
  4. https://www.outlookindia.com/outlookmoney/investment/the-fmcg-leader-dabur-2238 பார்த்த நாள் 19 சூன் 2020
  5. http://www.forbesindia.com/article/my-learnings/how-daburs-burmans-segregated-family-and-business/34203/1 பார்வை நாள் 27 சூலை 2017
  6. http://economictimes.indiatimes.com/news/news-by-industry/cons-products/fmcg/dabur-subsidiary-divests-stake-in-uae-based-group-firm-weikfield-international/articleshow/14507525.cms டைம்சு இந்தியா, 30 சூன் 2012
  7. http://ibnlive.in.com/news/dabur-rejects-black-money-charge-against-pradip-burman-lodhiya-shocked-to-see-his-name/508820-3.html பரணிடப்பட்டது 2014-10-29 at the வந்தவழி இயந்திரம் பார்வை நாள் 13 ஏப்ரல் 2017
  8. https://www.thehindu.com/news/national/10-out-of-13-honey-brands-fail-purity-test-finds-cse-investigation/article33230094.ece

வெளியினைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dabur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டாபர்&oldid=4161421" இலிருந்து மீள்விக்கப்பட்டது