பம்படி இராசன்

கேரளாவின் மிக உயரமான யானைகளில் ஒன்று

பம்படி இராசன் (Pampady Rajan)(கோட்டயம் ராஜன் என்றும் அழைக்கப்படுகிறது) (1974) பம்பாடி இராசன் என்றும் அழைக்கப்படுவது கேரளாவின் மிக உயரமான யானைகளில் ஒன்றாகும். இந்த யானை பல்வேறு கசா பட்டங்களைப் பெற்றுள்ளது. அவற்றுள் முக்கியமானவை, கசராஜன், கசகேசரி, கசாரக்தனம், கசாராசப்பிராசபதி, கசாராசகுலபதி, கசாராசா லக்சஷனா பெருமாள், கசராசா கசோதாம திலகம், கசேந்திரகனாமன் முதலியன. அதிக இரசிகர்களைக் கொண்டுள்ளதில் முதலாமிடம் வகிக்கிறது. அக்டோபர் 21, 2015ஆம் நாளன்று பாலக்காடு கொடுந்திராபுல்லி கிராமம், மகாநவமி கூட்டமைப்பினால் பம்பாடி ராசனுக்கு புதிய பட்டமான சர்வபாமன் கசராச கந்தர்வன் வழங்கப்பட்டது. 2006 மற்றும் 2007ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி அருகே நடைபெற்ற இதிதானம் யானை திருவிழாவின் வெற்றி நாயகனாவான். 2018ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் நாள் கேரளாவின் கொல்லம், கொல்லம், பீடிகா பகவதி கோயிலுக்கு இந்த யானை வந்தது. பம்படி ராசன் கேரள யானைகளின் தலைசிறந்த நட்சத்திரமாகும். கோயில் திருவிழாக்களில் தெய்வங்களின் உருவங்களை எடுத்துச் செல்ல யானைகள் தேர்வு செய்யப்படுவதால், மராடுவில் உள்ள ஒரு கோவில் திருவிழாவின் விளம்பரத்தில் நான்கு யானைகளுடன் ராசன் படமும் பிரதானமாக இடம்பெற்றது.[1] பம்படி ராடசன் செல்லமாக அப்பு என அழைக்கப்படுகிறது.

பம்படி இராசன்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்படி_இராசன்&oldid=3320581" இலிருந்து மீள்விக்கப்பட்டது