பம்பாய் தடைச் சட்டம், 1949
பம்பாய் தடைச் சட்டம், 1949 (Bombay Prohibition Act, 1949) என்பது பம்பாய் மாநிலத்தில் மதுவிலக்கை ஊக்குவித்தல் மற்றும் அமலாக்குதல் தொடர்பாக பம்பாய் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும் . பம்பாய் மாநிலம் 1960 ஆம் ஆண்டில் மகாராட்டிரா மற்றும் குசராத்து மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது [1]
இச்சட்டத்தின் கீழ் மதுபானம் வாங்குவதற்கு, வைத்திருப்பதற்கு, உட்கொள்வதற்கு அல்லது வழங்குவதற்கு அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். அனுமதியின்றி மதுபானம் வாங்குதல், அருந்துதல் அல்லது பரிமாறுதல் போன்ற குற்றங்களுக்காக மூன்று மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் ஒருவரை கைது செய்ய காவல்துறைக்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது. அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானம் கொண்டு சென்றால் 50,000 ரூபா அபராதமும் 5 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். [2]
சுதந்திரத்திற்குப் பிறகு, பாம்பாய் தடைக் குழுவின் உறுப்பினராக மராட்டிய ஆட்சேர்ப்பு வாரியத்தின் தலைவராக இருந்த பாம்பாயைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு இயே.எசு. சாவந்தை அரசாங்கம் நியமித்தது.
குறிப்பிடத்தக்க கைதுகள்
தொகு2013 ஆம் ஆண்டு ஆவணப்பட தயாரிப்பாளர் பிரித்தி சந்திரானி வீட்டில் சாக்லேட் தயாரிப்பதற்காக மது வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். [3] [4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ The Bombay (Reorganisation) Act, 1960
- ↑ "Facts know about Bombay Prohibition Act 1949 how to get liquor license permit in Mumbai City". Realityviews.in. 2012-06-24. பார்க்கப்பட்ட நாள் 2016-10-29.
- ↑ "Mumbai shocker: Woman arrested for possessing liquor for chocolates". Ndtv.com. 2012-06-24. பார்க்கப்பட்ட நாள் 2016-10-29.
- ↑ "Detained for not possessing liquor permits, woman let off - Indian Express". Archive.indianexpress.com. 2012-06-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-29.
- ↑ "Worli resident talks about ordeal after raid". Epaper.timesofindia.com. 2012-06-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-29.